கோவையில் முதல்வரின் வாழ்க்கை வரலாறு கண்காட்சி - நடிகர் சத்யராஜ் தொடக்கி வைத்தார்!

கோவை வஉசி மைதானத்தில் 'எங்கள் முதல்வர் எங்கள் பெருமை' என்ற முதல்வரின் புகைப்பட கண்காட்சி, இன்று தொடங்கி வரும் 14ம் தேதி வரை நடக்கிறது. முதல்வர் மு.க.ஸ்டாலினின் வாழ்க்கை வரலாறு புகைப்படங்கள், கட்சி சார்ந்த புகைப்படங்கள், அரசியல் நிகழ்ச்சிகளின் புகைப்படங்கள் உள்ளிட்டவை அடங்கிய கண்காட்சியை நடிகர் சத்யராஜ் தொடங்கி வைத்தார்.



கோவை: கோவை வ.உ.சி மைதானத்தில் நடைபெறும் 'எங்கள் முதல்வர் எங்கள் பெருமை' என்ற முதல்வரின் புகைப்பட கண்காட்சி நடிகர் சத்தியராஜ் தொடங்கி வைத்தார்.

கோவை வஉசி மைதானத்தில் 'எங்கள் முதல்வர் எங்கள் பெருமை' என்ற முதல்வரின் புகைப்பட கண்காட்சி வருகின்ற 14ம் தேதி வரை நடைபெறுகிறது. இதனை நடிகர் சத்யராஜ் தொடங்கி வைத்தார்.



இந்நிகழ்வில் அமைச்சர் செந்தில் பாலாஜி, கோவை மாநகராட்சி மேயர் கல்பனா ஆனந்தகுமார், பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் சண்முகசுந்தரம் உட்பட திமுகவினர் பலர் கலந்து கொண்டனர்.



இந்த புகைப்பட கண்காட்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் வாழ்க்கை வரலாறு புகைப்படங்கள், கட்சி சார்ந்த புகைப்படங்கள், அரசியல் நிகழ்ச்சிகள், முதல்வர் அறிவித்த திட்டங்கள் குறித்தான புகைப்படங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. மேலும் எம்ஜிஆர் உடன் மு.க.ஸ்டாலின் இருந்த புகைப்படமும் இடம் பெற்றுள்ளது. மேலும் பல்வேறு உருவ சிலைகளும் வைக்கப்பட்டுள்ளது.



குறிப்பாக மிசா வழக்கில் கைது செய்யப்பட்டு மு.க.ஸ்டாலின் சிறையில் இருந்த காட்சி உருவ சிலைகளாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.



கண்காட்சியை பார்வையிட்ட சத்யராஜ் கண்காட்சி குறித்தான கருத்து பதிவேட்டில், "வரலாற்று நாயகனை பற்றிய வரலாற்றை அறிந்து பெருமிதத்தோடு மகிழ்ந்தேன். வாழ்க திராவிட மாடல்- மாண்புமிகு முதல்வருக்கு வாழ்த்துக்கள்" என்ற கருத்தை பதிவு செய்துள்ளார்.

14ம் தேதி வரை நடைபெறும் இந்த கண்காட்சியில் அனுமதி இலவசம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...