சென்னை-கோவை இடையே வந்தேபாரத் எக்ஸ்பிரஸ் சேவை - பயணம் கட்டண விவரம் வெளியீடு

வந்தே பாரத் ரயிலில் சென்னையில் இருந்து கோவை செல்ல ஏசி சேர்காருக்கு ரூ.1,365, எக்சிகியூட்டிவ் சேர்காருக்கு ரூ.2,485, சென்னை- சேலம் செல்ல ஏசி சேர் காருக்கு ரூ.895-ம், எக்சிகியூட்டிவ் சேர் காருக்கு ரூ.1,740-ம், சென்னை-ஈரோடு செல்ல ஏசி சேர் காருக்கு ரூ.985-ம், எக்சிகியூட்டிவ் சேர் காருக்கு ரூ.1,930-ம், சென்னை- திருப்பூருக்கு ஏசி சேர் காருக்கு ரூ.1,280-ம், எக்சிகியூட்டிவ் சேர் காருக்கு ரூ.2,325-ம், கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.


கோவை: சென்னையில் இருந்து கோவை வரையில் இயக்கப்படும் வந்தே பாரத் ரயிலின் கட்டண விவரங்கள் வெளியாகியுள்ளது.

நாட்டின் முக்கிய வழித் தடங்களில் வந்தே பாரத் என்ற அதிநவீன அதிவிரைவு சொகுசு ரயில் இயக்கப்பட்டுவருகிறது. இந்நிலையில், தமிழகத்தில் சென்னை-கோவை இடையே புதிதாக வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமர் நரேந்திர மோடி சென்னையில் இன்று தொடங்கிவைத்தார். இதைத் தொடர்ந்து, நாளை முதல் வந்தேபாரத் ரயிலின் வழக்கமான சேவை தொடங்குகிறது.

கோவையிலிருந்து இந்த ரயில் (வண்டி எண்.20644) காலை 6 மணிக்குப் புறப்பட்டு முற்பகல் 11.50 மணிக்கு சென்னை சென்ட்ரலை வந்தடையும். மறுமார்க்கத்தில், இந்த ரயில் (20643) சென்னையிலிருந்து மதியம் 2.25 மணிக்குப் புறப்பட்டு இரவு 8.15 மணிக்கு கோவை சென்றடையும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ரயிலில் பயணம் செய்வதற்கானன கட்டண விவரங்கள் ஐஆர்சிடிசி இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி, சென்னையிலிருந்து கோவைக்குச் செல்ல ஏசி சேர் காரில் பயணம் செய்ய ரூ.1,365-ம், எக்சிகியூட்டிவ் சேர் காரில் பயணம் செய்ய ரூ.2,485-ம் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

சென்னை- சேலம் செல்ல ஏசி சேர் காருக்கு ரூ.895-ம், எக்சிகியூட்டிவ் சேர் காருக்கு ரூ.1,740-ம், சென்னை-ஈரோடு செல்ல ஏசி சேர் காருக்கு ரூ.985-ம், எக்சிகியூட்டிவ் சேர் காருக்கு ரூ.1,930-ம், சென்னை- திருப்பூருக்கு ஏசி சேர் காருக்கு ரூ.1,280-ம், எக்சிகியூட்டிவ் சேர் காருக்கு ரூ.2,325-ம், கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மேலும், டிக்கெட் முன்பதிவு செய்யும்போது உணவு கட்டணமும் சேர்த்து வசூலிக்கப்படுகிறது. உணவு தேவையில்லை எனில் அதற்கான கட்டணம் வசூலிக்கப்பட மாட்டாது என, ஐஆர்சிடிசி இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ரயிலுக்கான கட்டண விவரங்களை ரயில்வே நிர்வாகம் தரப்பு இதுவரை வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...