பல்லடம் அருகே வேலைக்கு ஆள் அனுப்புவதாக கூறி லட்சக்கணக்கில் மோசடி - வடமாநில கும்பல் மீது புகார்!

பல்லடம் அருகே ஆழ்துளை கிணறு அமைக்கும் மூர்த்தி என்பவரை செல்போனில் தொடர்பு கொண்டு, ஆழ்துளை கிணறு அமைக்கும் பணிக்கு ஆள் அனுப்புவதாக கூறி லட்சக்கணக்கில் பணமோசடி செய்ததாக திருப்பூர் மாவட்ட சைபர் கிரைம் போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.


திருப்பூர்: பல்லடம் அருகே ஆழ்துளை கிணறு அமைக்க ஆள் அனுப்புவதாக கூறி லட்சக்கணக்கில் மோசடியில் ஈடுபட்ட வடமாநில கும்பல் மீது சைபர் கிரைம் போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே பெருந்தொழுவு கிராமத்தில் வசித்து வருபவர் மூர்த்தி. இவர் ஆழ்துளை கிணறு அமைக்கும் தொழில் செய்து வருகிறார். மேலும் திருப்பூர், ஈரோடு, கோவை மாவட்ட ரிக் உரிமையாளர்கள் கூட்டமைப்பு சங்கத்தின் தலைவராகவும் உள்ளார்.



இவரிடம் 30 தொழிலாளர்கள் ஆழ்துளை கிணறு அமைக்கும் தொழிலில் பணியாற்றி வருகின்றனர். கடந்த ஏப்ரல் 4 ஆம் தேதி இவருக்கு ஒரிசாவில் இருந்து தொடர்பு கொண்ட நபர் ஒருவர் போர்வெல் வேலை தெரிந்த ஆட்கள் உள்ளார்கள் என கூறியுள்ளார். மேலும், உங்களுக்கு ஆட்கள் தேவை என்றால் அனுப்பி வைக்கிறோம் எனவும் தெரிவித்துள்ளார்.

மூர்த்தியும் ஐந்து நபர்களை மட்டும் அனுப்பி வைக்குமாறு தெரிவித்துள்ளார். அதற்கு 2000 ரூபாய் உணவுக்கு மட்டும் பணம் அனுப்புமாறு பேசிய வட மாநில கும்பலுக்கு ஆன்லைன் மூலம் 2000 ரூபாய் பணத்தை அனுப்பி உள்ளார்.



இந்நிலையில் கடந்த ஏப்ரல் ஆறாம் தேதி ஒரிசாவில் இருந்து ஐந்து வட மாநில தொழிலாளர்கள் திருப்பூருக்கு புறப்பட்டு விட்டனர் எனவும் அவருடைய ஆதார் கார்டு மற்றும் புகைப்படங்களையும் whatsapp மூலம் அனுப்பி உள்ளனர்.

மேலும் திருப்பூர் அருகே பேருந்து மூலம் பெருமாநல்லூர் வந்தடைந்து விட்டதாகவும் பேருந்து ஓட்டுனருக்கு நபர் ஒருவருக்கு 5000 வீதம் ஐந்து பேருக்கு 18000 ரூபாய் கொடுத்தால் மட்டுமே ஆட்களை இறக்கி விடுவோம் இல்லையெனில் கேரளாவுக்கு அனுப்பி விடுவோம் என கூறியதால் மீண்டும் பணம் அனுப்பியுள்ளார்.

பணம் அனுப்பிய அடுத்த ஐந்து நிமிடத்தில் வட மாநில கும்பல் மற்றும் ஓட்டுனரின் மொபைல் போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டதால் சந்தேகம் அடைந்த மூர்த்தி ரிக் உரிமையாளர்களின் வாட்ஸ் அப் குழுவில் இது குறித்து தகவல் பகிர்ந்துள்ளார். இதுபோன்று திருச்செங்கோடு, திருப்பூர், கோவை ஆகிய பகுதிகளில் 50க்கும் மேற்பட்ட ஆழ்துளை கிணறு அமைக்கும் லாரி உரிமையாளர்களிடம் வடமாநில கும்பல் பல லட்சம் ரூபாய் மோசடி செய்தது தெரியவந்தது.



இந்நிலையில் வேலைக்கு ஆட்கள் அனுப்புவதாக கூறி மோசடியில் ஈடுபட்டு வரும் வடமாநில கும்பல் மீது நடவடிக்கை எடுக்க கோரி திருப்பூர், ஈரோடு, கோவை மாவட்ட ரிக் உரிமையாளர் கூட்டமைப்பு சங்கத்தின் தலைவர் மூர்த்தி சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்துள்ளார்.

மேலும் இதுபோன்று வேலைக்கு ஆட்கள் அனுப்புவதாக வரும் அலைபேசி தொடர்புகளை நம்பி ஏமாற வேண்டாம் எனவும் ஆட்களை நேரில் பார்த்த பிறகு பணத்தை கொடுக்குமாறும் மூர்த்தி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Newsletter

கோவையில் ஒரே நாளில் 600க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு வெறிநாய்க்கடி தடுப்பூசி

Coimbatore மாநகராட்சி வார்டு 50, 51, 52, 54, 100 பகுதிகளில் வெறிநாய்க்கடி தடுப்பூசி திட்டத்தை தீவிரப்படுத்தி, கால்நடை மர...

Multiple LPG Cylinders Explode at Migrant Workers’ Quarters in Coimbatore’s Nava India

More than 40 temporary sheds were gutted after seven LPG cylinders exploded one after another at a migrant workers’ colo...

கோவை நவ இந்தியாவில் அடுத்தடுத்து வெடித்த 7 சமையல் எரிவாயு சிலிண்டர்கள்

கோவை நவ இந்தியா பகுதியில் வடமாநிலத் தொழிலாளர்கள் தங்கியிருந்த தற்காலிகக் குடியிருப்பில் அடுத்தடுத்து 7 சமையல் எரிவாயு சி...

கோவை கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை, கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் ஆகஸ்ட் 27, 2026 அன்று இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கூடுதல்...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைப...

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணி நடைபெறும்...