வந்தே பாரத் ரயில் கொங்கு மண்டலத்திற்கு மிகவும் பயனளிக்கும்! - கோவை தெற்கு எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் நம்பிக்கை

சென்னையில் இருந்து கோவைக்கு வந்த வந்தே பாரத் ரயிலுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்ட நிலையில், அதில் பயணித்து வந்த கோவை தெற்கு எம்.எல்.ஏ வானதி சீனிவாசன், விமானங்களில் இருக்கும் அனைத்து வசதிகளும் வந்தே பாரத் ரயிலில் உள்ளதாக தெரிவித்தார்.



கோவை: வந்தே பாரத் ரயிலானது கொங்கு மண்டலத்திற்கு பல்வேறு வகையில் பயன்படும் என பாஜக மகளிரணி தேசிய தலைவரும், கோவை தெற்கு எம்.எல்.ஏவுமான வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

சென்னை - கோவை நகரங்களை இணைக்கும் தமிழகத்திற்குள்ளான முதல் வந்தே பாரத் ரயில் சேவையை சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பிரதமர் நேற்று கொடியசைத்து துவக்கி வைத்தார்.



சென்னை - கோவை இடையேயான வந்தே பாரத் ரயில் நேற்று இரவு 11.05 மணியளவில் கோயம்புத்தூர் ரயில் நிலையம் வந்தடைந்தது. தானியங்கி கதவு, எல்இடி திரைகள், முற்றிலும் குளிரூட்டப்பட்ட வசதி என பல்வேறு நவீன அம்சங்களை கொண்ட வந்தே பாரத் ரயிலின் முதல் சேவையில் பயணித்த பயணிகள் மகிழ்ச்சியாக கோயம்புத்தூர் ரயில் நிலையம் வந்தடைந்தனர்.

பாஜக தேசிய மகளிர் அணி தலைவரும், கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் வந்தே பாரத் ரயிலின் முதல் பயணத்தில் சென்னையில் இருந்து கோவை வந்தடைந்தார். கோயம்புத்தூர் ரயில் நிலையத்தில் பாஜக சார்பில் வந்தே பாரத் ரயிலுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.



வந்தே பாரத் ரயிலில் பயணித்து கோவைக்கு வந்த பின்னர், கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் பேசியதாவது, தமிழகத்திற்கான முதல் வந்தே பாரத் ரயில் சேவையை பாரத பிரதமர் அவர்கள் துவக்கி வைத்திருப்பது சிறப்பான ஒன்றாகும்.

வந்தே பாரத் ரயில் சேவையின் மூலம் முக்கியமான நகரங்கள் குறைந்த நேரத்தில் இணைக்கப்படுகிறது. ஒரு விமானத்தில் இருக்கும் அனைத்து வசதிகளும் இதில் உள்ளது. 130 கிலோ மீட்டர் வேகத்தில் ரயில் சென்றாலும் எந்த விதமான அதிர்வுமின்றி பயணிக்க முடிகிறது.

அடுத்தடுத்த ரயில் நிலையங்கள் குறித்த தகவல்கள், மாற்றுத்திறனாளிகளுக்கான கழிவறை வசதி, பார்வை மாற்றுத்திறனாளிகளுக்கு பிரெய்லி எழுத்து வசதி உள்ளிட்ட பல்வேறு வசதிகளை உள்ளடக்கியதாக வந்தே பாரத் ரயில் உள்ளது.

வந்தே பாரத் ரயில் திட்டத்திற்காக பாரத பிரதமருக்கு மக்கள் நன்றி தெரிவித்து வருகின்றனர். பாரத பிரதமர் வலியுறுத்தும் ஆத்ம நிர்பர் திட்டத்திற்கு சான்றாக இந்த ரயில் முழுக்க முழுக்க இந்தியாவில், இந்திய தொழில் நுட்பத்தால் தயாரிக்கப்பட்டுள்ளது தனி சிறப்பாகும்.

குறிப்பாக, கொங்கு மண்டலத்திற்கு வந்தே பாரத் ரயில் சேவை மிகப்பெரிய பயன் அளிக்கும். தொழில், கல்வி உட்பட பல்வேறு தேவைகளுக்காக பல்வேறு நகரங்களோடு இணைக்கப்படுவதால் மேற்கு தமிழ்நாட்டிற்கு வந்தே பாரத் ரயில் பயனளிக்கும் வகையில் அமைந்துள்ளது.

தமிழ்நாட்டில் உள்ள ஐசிஎப்-ல் தயாரிக்கப்பட்ட இந்த ரயில் இந்தியா முழுவதும் செல்வது தமிழகத்திற்கு பெருமையாகும். தமிழகத்தின் முதல் வந்தே பாரத் ரயிலை கோவைக்கு கொடுத்ததற்காக கோவை மக்கள் சார்பாக பாரத பிரதமருக்கு நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.

ஒவ்வொரு முறையும் பாரத பிரதமர் தமிழகத்திற்கு வரும்போது கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான திட்டங்களை அள்ளித் தருகிறார். டெல்லியில் இருந்து கை நிறைய திட்டங்களோடு தமிழகத்திற்கு வரும் பாரதப் பிரதமரை தமிழகம் அன்போடு வரவேற்கிறது.

வரும் காலங்களில் பிரதமர் தமிழகத்திற்கு அதிகமாக வருவார் என எதிர்பார்க்கிறோம். வைஃபை, குளிரூட்டப்பட்ட வசதி போன்ற பல்வேறு நவீன வசதிகள் இந்த ரயிலில் இருப்பதால் இதன் விலை அதிகமாக தெரியலாம். தற்போது 8 பெட்டிகளோடு இயங்கி வருகிறது.

வரும் காலங்களில் பெட்டிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டு மக்களுக்கு சிறந்த சேவையை வழங்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும். மாநில அரசு இதனை முழுமையாக வரவேற்க வேண்டும். இதுபோன்று மத்திய அரசின்திட்டங்களுக்கு மாநில அரசு ஒத்துழைப்பு அளித்தால் தமிழகத்தின் வளர்ச்சி அதிகமாக இருக்கும்.

Newsletter

22 லட்சம் மாணவர்களின் மருத்துவ கனவை சிதைத்த ஒன்றிய அரசு - நீட் தேர்வு ரத்து கோரி பல்சமய நல்லுறவு இயக்கம் வலியுறுத்தல்

கோயம்புத்தூரில் பல்சமய நல்லுறவு இயக்கம் நீட் தேர்வில் நடக்கும் முறைகேடுகளை கண்டித்து, வட மாநிலங்களில் வினாத்தாள் கசிவு ம...

22 லட்சம் மாணவர்களின் மருத்துவக் கனவை சிதைத்த ஒன்றிய அரசு - முறைகேடுகளுடன் நடக்கும் NEET தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தல்

NEET தேர்வில் தொடர் முறைகேடுகள் நடந்து வருவதாக குற்றம்சாட்டி, பல்சமய நல்லுறவு இயக்கம் உடனடியாக தேர்வை ரத்து செய்ய வேண்டு...

AIADMK சூலூர் வடக்கு ஒன்றிய செயலாளர் வி.பி.கந்தவேல் கட்சியிலிருந்து ராஜினாமா

கோயம்புத்தூர் தெற்கு மாவட்ட AIADMK சூலூர் வடக்கு ஒன்றிய கழக செயலாளர் வி.பி.கந்தவேல், கட்சியின் தற்போதைய நிகழ்வுகளால் மன...

கோவை மாநகராட்சி விளையாட்டு மைதானத்தில் உள்விளையாட்டு அரங்கங்கள் அமைக்கும் பணிகளை கோவை மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி விளையாட்டு மைதானத்தில் கைப்பந்து, இறகுபந்து, கபடி, Wushu உள்ளிட்ட விளையாட்டுகளுக்கான உள்விளையாட...

கோவை மாநகராட்சி விளையாட்டு மைதானத்தில் உள்விளையாட்டு அரங்கங்கள் அமைக்கும் பணிகளை ஆணையர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி விளையாட்டு மைதானத்தில் கைப்பந்து, இறகுபந்து, கபடி, Wushu உள்ளிட்ட விளையாட்டுகளுக்கான உள்விளையாட...

முதல்வரின் தனிப்பட்ட ஜோதிடரின் OSD நியமனம் ரத்து: தமிழக அரசு உத்தரவு

முதல்வரின் தனிப்பட்ட ஜோதிடரான ரிக்கே ராதன் பண்டிட் வெற்றிவேலின் அரசியல் OSD நியமனத்தை, கடும் எதிர்ப்புகள் மற்றும் விமர்ச...