கோவையில் ஆசிட் வீச்சில் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ரூ.3 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு

கோவை நீதிமன்ற வளாகத்தில் கவிதா என்ற பெண் மீது அவரது கணவர் கடந்த மார்ச் 23ஆம் தேதி ஆசிட் வீசியதில் படுகாயமடைந்து சிகிச்சைப் பெற்று வரும் நிலையில், அவருக்கு ரூ.3 லட்சம் இழப்பீடு வழங்கும்படி, தமிழ்நாடு அரசுக்கு கோவை மாவட்ட சட்டப்பணிகள் ஆணையக்குழு உத்தரவிட்டுள்ளது.


கோவை: நீதிமன்ற வளாகத்தில் ஆசிட் வீச்சால் படுகாயமடைந்த பெண்ணுக்கு இழப்பீடு வழங்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

கோவை நீதிமன்ற வளாகத்தில் கடந்த மார்ச் 23ஆம் தேதி விசாரணைக்கு வந்த கவிதா என்பவர் மீது அவரது கணவர், ஆசிட் வீசியதில் படுகாயமடைந்தார். அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.

இது குறித்து கோவை பந்தைய சாலை காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த வழக்கு விசாரித்த கோவை மாவட்ட சட்டப்பணிகள் ஆணையக்குழு நீதிபதி சிவா, தமிழ்நாடு பாதிக்கப்பட்டோர் இழப்பீடு திட்டத்தின் படி இடைக்கால இழப்பீடு நிவாரணமாக பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு இழப்பீடாக ரூ.3 லட்சம் வழங்கும்படி அரசுக்கு உத்தரவிட்டுள்ளார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...