ஒன்றிய அரசின் போட்டி தேர்வுகளை மாநில மொழிகளில் நடத்துக..! - கோவையில் DYFI போராட்டம்!

மத்திய அரசின் போட்டித் தேர்வுகளை அந்தந்த மாநில மொழிகளில் நடத்த கோரியும், சி.ஆர்.பி.எப் தேர்வை தமிழ் மொழியிலும் நடத்த வேண்டும் என வலியுறுத்தியும் கோவை பி.எஸ்.என்.எல் அலுவலகம் முன்பு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.



கோவை: ஒன்றிய அரசின் போட்டித்தேர்வுகள் அந்தந்த மாநில மொழிகளிலேயே நடத்திட வலியுறுத்தி கோவையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஒன்றிய அரசின் போட்டித் தேர்வுகளை அந்தந்த மாநில மொழிகளிலேயே நடத்திட கோரியும், CRPF தேர்வை தமிழ் மொழியிலும் நடத்த வேண்டும் என வலியுறுத்தியும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில், தமிழ்நாடு முழுவதும் இன்று போராட்டம் நடைபெற்று வருகிறது.



அதன் ஒரு பகுதியாக கோவை மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள BSNL அலுவலகத்திற்கு முன்பு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.



மாவட்ட செயலாளர் அர்ச்சுனன் தலைமையில் நடைபெற்ற இந்தப் போராட்டத்தில் சுமார் 20க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர். இதில் தமிழ் மொழியை தொடர்ந்து புறக்கணிப்பதாக கூறி, ஒன்றிய அரசை கண்டித்தும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

மேலும், இந்த போராட்டத்தில் செய்தியாளர்களை சந்தித்த அர்ச்சுனன் கூறுகையில், கடந்த பல வருடங்களாக CRPF தேர்வு ஆங்கிலம் மற்றும் இந்தி மொழியில் மட்டுமே நடைபெறுகிறது. இதனால் பிற மொழிகளை தாய்மொழியாக கொண்டவர்கள் பாதிக்கப்படுகின்றனர். மேலும் ஒன்றிய அரசு போட்டி தேர்வுகள் அனைத்தையும் அந்தந்த மாநில மொழிகளில் நடத்த வேண்டும், என்றார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...