குறைதீர்ப்புக் கூட்டத்தில் கோரிக்கை மனு அளித்த பொதுமக்கள் - கோவை மாநகராட்சி மேயர் அதிரடி உத்தரவு

கோயம்புத்தூர்‌ மாநகராட்சியில் நடைபெற்ற குறைதீர்ப்புக் கூட்டத்தில் மேயர் கல்பனாவிடம், பொதுமக்கள் 86 மனுக்களை அளித்தனர். அந்த மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு மேயர் கல்பனா ஆனந்தகுமார் அதிரடி உத்தரவு பிறப்பித்தார்.


கோவை: கோயம்புத்தூர்‌ மாநகராட்சியில் நேற்று நடைபெற்ற மக்கள் குறைதீர்ப்புக் கூட்டத்தில் மேயர் கல்பனாவிடம், பொதுமக்கள் 86 பேர் தங்களது கோரிக்கை மனுக்களை அளித்தனர்.

கோயம்புத்தூர்‌ மாநகராட்சி பிரதான அலுவலகத்தில்‌ மக்கள்‌ குறைதாக்கும்‌ நாள்‌ கூட்டம்‌ மேயர் கல்பனா ஆனந்தகுமார்‌ தலைமையில்‌ நடைபெற்றது. இக்கூட்டத்தில்‌ மாநகராட்சி துணை ஆணையாளர்கள்‌ மரு.மோ.ஷாமிளா, க.சிவகுமார்‌ ஆகியோர்‌ முன்னிலை வகித்தார்கள்‌.



இந்த குறைதீர்ப்புக் கூட்டத்தில்‌ மேயரிடம், மாநகராட்சியின்‌ அனைத்து பகுதிகளைச்‌ சேர்ந்த பொதுமக்கள்‌ 86 கோரிக்கை மனுக்களை அளித்தனர்‌. அதில்‌, பிறப்பு, இறப்பு சான்றிதழ்கள்‌, சாலை வசதி, மின்விளக்குகள்‌, குடிநா வசதி, பாதாள சாக்கடை, தொழில்வரி, சொத்துவரி, காலியிடவரி, புதிய குடிநீர் இணைப்பு, பெயர்‌ மாற்றம்‌, மருத்துவம்‌, சுகாதாரம்‌, கல்வி உள்ளிட்ட அடிப்படை வசதிகள்‌ குறித்த பல்வேறு கோரிக்கைகளை மக்கள் முன்வைத்திருந்தனர்.

இவற்றில்,‌ கிழக்கு மண்டலத்தில்‌ 19 மனுக்களும்‌, மேற்கு மண்டலத்தில்‌ 10 மனுக்களும்‌, வடக்கு மண்டலத்தில்‌ 14 மனுக்களும்‌, தெற்கு மண்டலத்தில்‌ 13 மனுக்களும்‌, மத்திய மண்டலத்தில்‌ 21 மனுக்களும்‌, பிரதான அலுவலகத்தில்‌ 9 மனுக்களும்‌ எனமொத்தம்‌ 86 மனுக்களை பொதுமக்கள்‌ அளித்தனர்‌.

அவற்றைப் பெற்றுக்கொண்ட மேயர் கல்பனா ஆனந்தகுமார்,‌ மனுக்கள் தொடர்பாக உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட மண்டல உதவி ஆணையாளர்கள்‌, பொறியாளர்கள்‌ மற்றும்‌ அலுவலா்களுக்கு உத்தரவிட்டார்.

இக்கூட்டத்தில்‌, மண்டல உதவி ஆணையார்கள்‌ அண்ணாதுரை, எஸ்‌.கணேஷ்குமார்‌(பொ), முத்துராமலிங்கம்‌, மோகனசுந்தரி, சேகர்‌, உதவி ஆணையா்‌(வருவாய்‌) செந்தில்குமார்‌ இரத்தினம்‌, நகரமைப்பு அலுவலா்‌ கருப்பாத்தாள்‌, உதவி செயற்பொறியாளார்கள்‌, உதவி நகரமைப்பு அலுவலாகள்‌, உதவி பொறியாளார்கள்‌, மாநகராட்சி அனைத்து அலுவலா்கள்‌ மற்றும்‌ பொதுமக்கள்‌ கலந்துகொண்டனர்.

Newsletter

கோவையில் மாணவர்களுக்கு வெறிநோய் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை மாநகராட்சி, மத்திய மண்டலம், வார்டு எண்.63க்கு உட்பட்ட இராமநாதபுரம் மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் செப்டம்பர் 25, 2...

கோவை மேற்கு மண்டலத்தில் குப்பைகளை நான்கு வகைகளாக தரம் பிரித்து வழங்குவது குறித்த விழிப்புணர்வு நடைபயணம்

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம் வார்டு எண்.38க்குட்பட்ட கல்வீரம்பாளையம் பள்ளி முதல் பொம்மனாம்பாளையம் கோயில் வரை, குப்பைகள...

கோவை கற்பகம் உயர்கல்வி நிறுவனத்தில் புதிய Pre-Incubation Centre மற்றும் Startup Studio தொடக்கம்

கோவை கற்பகம் உயர்கல்வி நிறுவனத்தின் 'கற்பகம் புத்தாக்கம் மற்றும் இன்குபேஷன் கவுன்சில்' (KIIC), தனது புதிய 'Pre-Incubatio...

2016 ஆனைமலை இளைஞர் கொலை வழக்கில் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை: கோவை மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பு

ஆனைமலை காவல் நிலையத்தில் குற்ற எண் 369/2016-ன் கீழ் பதிவான கொலை வழக்கில், மீனாட்சிபுரத்தைச் சேர்ந்த பாப்பான் @ சுதானந்தம...

ஜெம் வீரமணி வழக்கு: கோவை காவல் ஆணையர் உள்பட 2 ஐபிஎஸ் அதிகாரிகள் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்

ஜெம் வீரமணி வழக்கு தொடர்பாக கோவை மாநகர காவல் ஆணையர் Dr.N.கண்ணன் மற்றும் கூடுதல் ஆணையர் அருண் ஆகிய இரு மூத்த ஐபிஎஸ் அதிகா...

கோவை–போத்தனூர் இடையே பராமரிப்பு பணி: செப்.25, 26-ல் இரு மெமு ரயில் சேவையில் மாற்றம்

செப்டம்பர் 25 மற்றும் 26, 2026 ஆகிய தேதிகளில் கோவை-போத்தனூர் ரயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாள பராமரிப்பு பணிகள் நடைபெற...