கோவையில் சாலையில் நடந்துச் சென்ற குழந்தை, தவறி விழுந்து பலி

கோவை நரசிம்மன்நாயக்கன் பாளையத்தில் சாலையில் இரண்டரை வயது மகளுடன் சத்தியபிரியா என்பவர் நடந்துச் சென்றார். குழந்தை சாலையில் கீழே விழுந்து தலையில் பலத்த காயம் அடைந்தது. இதையடுத்து கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது, குழந்தை ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தார்.


கோவை: கோவை அருகே சாலையில் நடந்துச் சென்ற குழந்தை கீழே விழுந்து, தலையில் பலத்த காயமடைந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோவை நரசிம்மநாயக்கன் பாளையத்தை சேர்ந்த தம்பதி உதயகுமார்- சத்தியபிரியா. இவர்களின் இரண்டரை வயதில் சுபிக்ஷா என்ற மகள் உள்ளார். சம்பவத்தன்று, சத்தியபிரியா தனது மகளுடன் அருகே உள்ள கடைக்கு சென்றார். பின்னர் மகளை தூக்கி கொண்டு நடந்து வந்தார்.

அப்போது குழந்தை தன்னை இறக்கி விடுமாறு, அடம்பிடித்ததால் சத்தியபிரியா மகளை இறக்கி விட்டுள்ளார். குழந்தை நடந்து சென்று கொண்டிருந்தது வீட்டின் அருகே வந்த போது குழந்தை திடீரென கால் இடறி சாலையில் விழுந்து விட்டது.

இதில் குழந்தையின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த சத்தியபிரியா குழந்தையை தூக்கி கொண்டு அருகே இருந்த தனியார் மருத்துவமனைக்கு சென்றார். அங்கு முதலுதவி அளித்த, பின்னர் வீட்டிற்கு அழைத்து வந்தார். இந்த நிலையில் வீட்டிலிருந்த குழந்தைக்கு உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டது.

இதையடுத்து பெற்றோர் அருகேயுள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு குழந்தை பரிசோதித்த மருத்துவர்கள் கோவை அரசு மருத்துவமனைக்கு செல்லுமாறு அறிவுறுத்தினர். இதையடுத்து பெற்றோர் குழந்தையை அழைத்துக் கொண்டு, சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு சென்றனர்.

அங்குக் குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாகத் தெரிவித்தனர். இதைக்கேட்டதும் பெற்றோர் கதறி அழுதனர். இது அங்கு இருந்தவர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் குறித்து பெரியநாயக்கன்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...