கோவை பச்சாபாளையம் மின் பிரச்னையை சரிசெய்ய பொதுமக்கள் கோரிக்கை!

கோவை பச்சாம்பாளையம் ஜெகன்நாதன் நகரில் 25ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றன. கிராமத்தில் மின் பிரச்னை உள்ளதால், மின்சார வாரியம் அல்லது மாநகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து, மின்பிரச்சினையை சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


கோவை: பச்சாம்பாளையம் பகுதியில் நிலவும் மின் பிரச்சினையை சரிசெய்யும்படி பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

கோவை பச்சாப்பாளையம் பகுதியில் ஜெகன்நாதன் நகர் உள்ளது. இங்கு 25,000-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். மேலும் பல்வேறு சிறு,சிறு நிறுவனங்களும் இயங்கி வருகின்றன. இங்கு கடந்த 2 வருடங்களுக்கும் மேலாக மின்சார பிரச்னை (Low Voltage) இருப்பதாக கூறப்படுகிறது.

இது குறித்து பலமுறை அந்த பகுதி மக்கள் மின்சார வாரியத்திடம் புகார் மனு அளித்தும், இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இது குறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது:

கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக தங்கள் பகுதியில் மின்சார பிரச்னை (Low Voltage) நிலவி வருகிறது. குறிப்பிட்ட நேரம் சீராக மின்சாரம் வந்து கொண்டிருக்கும் போது, திடீரென fluctuation ஏற்படும். Low Voltage ஆகிவிடும்.

இதனால் வீட்டில் உள்ள மின்விசிறி, குளிர்சாதன பெட்டி, தொலைக்காட்சி, கிரைண்டர் ஆகிய பொருட்கள் அனைத்தும் பழுதாகி விடுகின்றன.

அதுமட்டுமின்றி நிறுவனங்களில் உள்ள விலை உயர்ந்த இயந்திரங்களும் பழுதாகி விடுகிறது. இதனால் அடிக்கடி பழுதான இயந்திரங்களை சரிசெய்யும் சூழல் ஏற்படுவதால், பணம் அதிகம் செலவாகிறது. மேலும் தொழிலும் பாதிக்கப்படுகிறது. இங்குள்ள பலரும் சிறு, சிறு தொழில் நிறுவனங்களை வைத்து நடத்தி வருபவர்கள் தான்.

கொரோனா காலத்திலேயே பெரும் நஷ்டத்தை சந்தித்த அவர்கள் தற்போது இந்த மின்சார பிரச்னைகளால் தொடர்ந்து நஷ்டத்தையே சந்தித்து மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். இதுகுறித்து பேரூர் மின்சார வாரியத்தில் புகார் மனுக்கள் அளித்தோம். இதுவரை எவ்வித நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை.

மின்சார பிரச்னை ஏற்பட்டால் ஒவ்வொரு முறையும் மின்வாரிய பணியாளர்களை அழைத்து அதனை சரி செய்கிறோம். ஆனால் மீண்டும் அந்த பிரச்சனை தொடர்ந்து ஏற்படுகிறது. இந்த பிரச்சனையால் சில நிறுவனத்தினர் அவர்களது நிறுவனத்தை மூடிவிட்டு சென்றுவிட்டனர்.

இது குறித்து அப்பகுதியில் நடைபெற்ற மக்கள் குறை தீர்ப்பு முகாமிலும் புகார்கள் அளிக்கப்பட்டது. ஆன்லைன் மூலமாகவும் மனு அளிக்கப்பட்டது. ஆனால் எவ்வித பயனும் இல்லை. எனவே தங்கள் பகுதிக்கு கூடுதலாக டிரான்ஸ்பார்மர் இணைப்பு இருந்தால், இந்த பிரச்சனைக்கு ஒரு தீர்வு கிடைக்கும் என எதிர்பார்க்கிறோம்.

மின்சார வாரியம் அல்லது மாநகராட்சி நிர்வாகம் தங்கள் பகுதியில் நிலவும் மின்சார பிரச்சினையை போக்குவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் மேலும் தங்களது பிரதான கோரிக்கையான புதிய கூடுதல் டிரான்ஸ்பார்மர் அமைக்க வேண்டும்.

இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...