கோவை ஆட்சியர் அலுவலகத்தில் சமத்துவ நாள் உறுதிமொழி ஏற்பு!

சட்ட மேதை அம்பேத்கரின் பிறந்த தினத்தை முன்னிட்டு கோவையில் மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி தலைமையில் சமத்துவ நாள் உறுதிமொழி எடுத்துக்கொள்ளப்பட்டது. இதில், மாவட்ட வருவாய் அலுவலர் லீலா அலெக்ஸ் உட்பட அரசு அதிகாரிகள், பொதுமக்கள் கலந்துக் கொண்டனர்.


கோவை: கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சமத்துவ நாள் உறுதிமொழி எடுக்கப்பட்டது.

அண்ணல் அம்பேத்கரின் பிறந்தநாள் நாளை கொண்டாடப்படவுள்ளது. அம்பேத்கர் பிறந்த தினத்தை சமத்துவ நாளாக கடைபிடிக்க அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி அனைத்து அரசு அலுவலகங்களிலும் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் இன்று சமத்துவ நாள் கடைபிடிக்கப்படுவதை முன்னிட்டு உறுதிமொழி எடுத்து வருகின்றனர்.



அதன் ஒரு பகுதியாக, கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் கிராந்திகுமார்பாடி தலைமையில் அரசு அலுவலர்கள், அரசு பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் சமத்துவ நாள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.



முன்னதாக அம்பேத்கர் புகைப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.



இந்த நிகழ்ச்சியில், கோவை மாவட்ட வருவாய் அலுவலர் லீலா அலெக்ஸ், தமிழ்நாடு விசாயிகள் சங்க தலைவர் பழனிச்சாமி மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...