கோவை விமான நிலையத்தில் வேலைவாங்கித் தருவதாக கூறி ரூ.12.50 லட்சம் மோசடி!

கோவை விமான நிலையத்தில் வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.12.50 லட்சம் மோசடி செய்த கோவை நீலிக்கோணாம்பாளையத்தை சேர்ந்த மணிகண்டன் என்பவர் மீது நடவடிக்கை எடுக்ககோரி, திருச்சி மாவட்டம் திருவெறும்பூரைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் என்பவர் பீளமேடு காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.


கோவை: கோவை விமான நிலையத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.12.50 லட்சம் மோசடி செய்தவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

திருச்சி மாவட்டம் திருவெறும்பூரை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன்(59). இவருக்கு கோவை நீலிகோனாம்பாளையம் மகாலட்சுமி நகரை சேர்ந்த மணிகண்டன் (42) என்பவர் அறிமுகம் ஆனார். ராதாகிருஷ்ணன் கோவை வந்த போது மணிகண்டனை சந்தித்து பேசினார்.

அப்போது அவர் தனது மகனுக்கு வேலை தேடி வருவதாகத் தெரிவித்துள்ளார். இதைக் கேட்ட மணிகண்டன் தனக்கு கோவை விமான நிலையத்தில் உயர் அதிகாரியுடன் நெருக்கமான பழக்கம் உள்ளது. சிலருக்கு நான் வேலை வாங்கிக் கொடுத்து இருக்கிறேன்.

நீங்கள் பணம் கொடுத்தால் நான் கோவை விமான நிலையத்தில் வேலை வாங்கி தருகிறேன் என ஆசை வார்த்தை கூறியுள்ளார். இதனை ராதாகிருஷ்ணனும் உண்மை என நம்பி, கடந்தாண்டு ஏப்ரல் முதல் கடந்த ஜனவரி மாதம் வரை பல்வேறு தவணைகளில் ரூ.12.50 லட்சத்தை மணிகண்டனிடம் கொடுத்துள்ளார். பணத்தை பெற்று கொண்ட மணிகண்டன் கூறியபடி வேலையை வாங்கி கொடுக்கவில்லை.

இது குறித்து கேட்டால் சரியாக பதில் சொல்லவும் இல்லை. இதனால் ராதாகிருஷ்ணன், கொடுத்த பணத்தை திருப்பி கேட்டார். ஆனால் பணத்தையும் கொடுக்காமல் இழுத்தடித்து வந்தார். இதனால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த ராதாகிருஷ்ணன், பீளமேடு போலீசில் புகார் அளித்தார்.

புகாரின் பேரில் போலீசார் மணிகண்டன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...