தமிழ் புத்தாண்டு கொண்டாட்டம் - கோவை கோயில்களில் பக்தர்கள் கூட்டம்!

கோவையில் தமிழ் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு அதிகாலை முதலே பொதுமக்கள், கோவில்களில் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்துவருகின்றனர். சித்திரை முதல் நாளையொட்டி, வீடுகளில் பழங்கள் வைத்தும் மக்கள் வழிபட்டனர்.



Coimbatore: தமிழகத்தில் தமிழ்புத்தாண்டு (சித்திரைக்கனி) இன்று உற்சாகமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி, பொதுமக்கள், தங்களது இல்லங்களில், பல வகையான பழங்களை வைத்து வழிபாடு செய்த பின்னர் கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

தமிழ் புத்தாண்டையொட்டி, கோவையில் உள்ள அனைத்து கோவில்களிலும் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. முக்கியமாக புலியகுளம் விநாயகர் கோவில், கோனியம்மன் கோவில், மருதமலை, பேரூர் சிவன் கோவில் ஆகிய கோவில்களில் அதிகாலை முதலில் இருந்தே பக்தர்கள் அதிக அளவு வந்தவண்ணம் உள்ளனர்.



புலியகுளத்தில் உள்ள முந்தி விநாயகர் திருக்கோவிலில் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.



உலக புகழ் பெற்ற 19 அடி உயரம் 190 டன் எடை கொண்ட ஆசிய கண்டத்திலேயே மிகப் பெரிய முந்தி விநாயகர் சிலைக்கு சித்தரை கனியை முன்னிட்டு ஆப்பிள், ஆரஞ்சு, பலாப்பழம் அன்னாசி, வாழைத்தார், மாதுளை, கொய்யா என 2 டன் அளவிற்கு பழங்களை கொண்டு அலங்காரங்கள் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு வருகிறது.

மேலும், தரிசனத்திற்காக இங்கு வரும் பக்தர்கள் அருகம்புல்லை காணிக்கையாக விநாயகருக்குச் செலுத்தி வருகின்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...