கோவை ஈஷாவில்‌ களைக்கட்டிய தமிழ்‌ புத்தாண்டு கொண்டாட்டம்!

தமிழ்‌ புத்தாண்டை ஒட்டி ஈஷாவில்‌ உள்ள லிங்க பைரவி தேவிக்கு பக்தர்கள்‌ பல வகையான பழங்களை அர்ப்பணித்து வழிப்பட்டனர்‌. தமிழகம்‌ முழுவதும்‌ இருந்து வருகை தந்த ஆயிரக்கணக்கான மக்கள்,‌ தேவியை தரிசனம்‌ செய்து அருளைப்‌ பெற்றனர்‌.


கோவை: கோவை ஈஷா மையத்தில் தமிழ்புத்தாண்டு வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது.



கோவை ஈஷா மையத்தைச் சுற்றியுள்ள கிராம மக்கள் பழங்களை கொண்டு உருவாக்கப்பட்ட லிங்க பைரவி திருமேனியை ஆதியோகி சிலையிலிருந்து ரதத்தில்‌ வைத்து ஊர்வலமாக எடுத்து வந்தனர்‌.



இதை தொடர்ந்து மாலை சவுண்ட்ஸ்‌ ஆஃப்‌ ஈஷா மற்றும்‌ ஈஷா சம்ஸ்கிரிதி மாணவர்களின்‌ பக்தி பாடல்களுடன்‌ கூடிய இசை நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர்‌, லிங்க பைரவியில்‌ சிறப்பு அபிஷேகமும்‌ நடைபெற்றது.

இதுதவிர, பக்தி நயம்‌ ததும்பும்‌ தேவாரப்‌ பாடல்களை தமிழக கிராமங்கள்‌ தோறும்‌ கொண்டு சேர்க்க வேண்டும்‌ எனக் கடந்த மஹாசிவராத்திரி அன்று சத்குரு கூறினார்‌. அதன்‌ ஒரு பகுதியாக, ஆதியோகி முன்பு தேவாரப்‌ பாடல்களை அர்ப்பணிக்கும்‌ 12 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு சிறப்பு பரிசும்‌ வழங்கப்படும்‌ என அறிவித்தார்‌.



இதன்‌ தொடக்கமாக, சென்னையைச்‌ சேர்ந்த 9 வயது சிறுவன்‌ கரிய நாராயணன்‌ தோடுடைய செவியன்‌, பித்தா பிறைதடி, வானனை மதி கடிய போன்ற தேவாரப்‌ பாடல்களை ஆதியோகிக்கு அர்ப்பணித்து அவரின்‌ திருமேனியை பரிசாக பெற்றார்‌.



9 வயதே ஆன இச்சிறுவன்‌ தனது தந்‌தை ஹரிஹரன்‌ சிவராமனிடமிருந்து 5 வயது முதல்‌ கர்நாடக சங்கீதம்‌ கற்று வருகிறார்‌. இவர்‌ தூர்தர்ஷன்‌ பொதிகை டிவி, மலேசியா சர்வதேச கர்நாடக இசை திருவிழா, கிருஷ்ண கான சபை மற்றும்‌ பல்வேறு கோவில்‌ திருவிழாக்களிலும்‌ பக்தி பாடல்கள்‌ பாடியுள்ளார்‌.

அவருடன்‌ சேர்ந்து ஏராளமான குழந்தைகள்‌ தேவாரம்‌ பாடி பரிசுகள்‌ பெற்றனர்‌. முன்னதாக, சிவனுக்கு உகந்த கைலாய வாத்தியமும்‌ இசைக்கப்பட்டது.

Newsletter

கோவையில் தொடரும் கொலை சம்பவங்கள்: ஆலாந்துறையில் பட்டப்பகலில் ஒருவர் வெட்டிக்கொலை

கோவை ஆலாந்துறையில் நாகராஜ் (60) என்பவர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், அதே பகுதியைச் சேர்ந்த கந்தசாமி என்பவரை போ...

இந்தியத் திறன் போட்டிகள் 2027-க்கான பதிவு தொடக்கம் - கோவை ஆட்சியர் அறிவிப்பு

ஷாங்காய், சீனா 2026ல் நடைபெறும் உலகத்திறன் போட்டிகளுக்கான இந்தியத் திறன் போட்டிகள் 2027-க்கு பதிவுகள் துவங்கின. 16 முதல்...

உலகத்திறன் போட்டிகள் 2027-க்கான பதிவு தொடக்கம் - கோவை ஆட்சியர் அறிவிப்பு

ஷாங்காய், சீனா 2026ல் நடைபெறும் உலகத்திறன் போட்டிகளுக்கான இந்தியத் திறன் போட்டிகள் 2027-க்கு பதிவுகள் துவங்கின. 16 முதல்...

கோவையில் டெங்கு தடுப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு சரிபார்ப்பு பட்டியல் வழங்கப்படும்

கோவை மாநகராட்சி 100 வார்டுகளில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. 28.08.2026 முதல் பள்ளிகள், கல்லூரிகள்...

கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்தில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டல பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வார்டு...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் பீளமேடு பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு, சாலை அமைப்பு,...