மூலனூர் விற்பனை கூடத்தில் ரூ.2.52 கோடிக்கு பருத்தி ஏலம்!

தாராபுரம் அடுத்த மூலனூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் பருத்தி விற்பனைக்கான மறைமுக ஏலம் நடைபெற்றது. இதில் ரூ.2.52 கோடிக்கு பருத்தி ஏலம் போனது. அதிகபட்ச விலையாக ஒரு குவிண்டால் பருத்தி ரூ.8,532-க்கு விலை போனது.


திருப்பூர்: மூலனூர் ஒழுங்குமுறை விற்பனை கூட்டத்தில் பருத்தி ஏலம் நடைபெற்றது.

திருப்பூர் மாவட்டம் மூலனூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில்பருத்தி விற்பனை மறைமுக ஏலம் நடைபெற்றது. இதில் திருப்பூர், கரூர், திருச்சி, திண்டுக்கல், ஈரோடு, கோவைமாவட்டங்களைச் சேர்ந்த 1084 விவசாயிகள் பருத்திகளை விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர்.

அதேபோல் பருத்தியினை கொள்முதல் செய்ய திருப்பூர், திண்டுக்கல், ஈரோடு, சேலம் கோவை மாவட்டங்களைச் சேர்ந்த வணிகர்களும், மறைமுக ஏலத்தில் பங்கேற்றனர்.



ஏலத்தில் அதிகபட்ச விலையாக ஒரு குவிண்டால் பருத்தி ரூ.8,532-க்கும் குறைந்தபட்ச விலையாக ரூ.6,900-க்கும், சராசரி விலையாக ரூ.7,500-க்கும் விற்பனையானது.

ஒட்டுமொத்தமாக ரூ2,52,94,719-க்கு ஏலம் போனது என முதுநிலை செயலாளர் திருப்பூர் விற்பனைக்குழு திரு.கண்ணன்(பொறுப்பு) தெரிவித்தார். ஏலத்திற்கான ஏற்பாடுகளை கண்காணிப்பாளர் சிவக்குமார் செய்திருந்தார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...