விஷூ பண்டிகை கொண்டாட்டம் - கோவை சித்தாபுதூர் ஐயப்பன் ஆலயத்தில் சிறப்பு பூஜை

மலையாள வருட பிறப்பான விஷு தினத்தை முன்னிட்டு கோவையில் புகழ்பெற்ற சித்தாபுதூர் ஐயப்பன் கோயில் முழுவதும் பூக்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. மூலவர் ஐயப்ப சாமிக்கு கொன்றை பூக்களால் சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டு இருந்தது. ஆலயத்திற்கு வந்த மக்கள் சிறப்பு தரிசனம் செய்தனர்.


கோவை: சித்தாபுதூர் ஐயப்பன் ஆலயத்தில் மலையாள வருட பிறப்பான விஷு தினத்தை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

கேரளாவில் உள்ள மக்கள் தமிழர்களின் பாரம்பரிய பண்டிகையான தீபாவளியை பட்டாசுகள் வெடித்துக் கொண்டாடுவது போல், மலையாள புத்தாண்டை பட்டாசுகள் வெடித்தும், வானவேடிக்கைகள் வைத்தும் சிறப்பாக வரவேற்பது வழக்கம்.

மேலும் வீடுகளில் முன்தினம் இரவே பழங்கள், பூக்களால் தங்களது பூஜை அறையை அலங்கரித்து காய்கறிகள், நவதானியங்கள், மற்றும் ஆபரணங்கள் அனைத்தும் வைத்து தயார் நிலையில் வைத்திருப்பார்கள்.

அதிகாலையில் வீட்டில் உள்ள குழந்தைகளின் கண்களை கட்டியப்படி அழைத்து வந்து அலங்கரிக்கப்பட்ட பூஜை அறையை முதலில் பார்த்து எழுவதுபோல் தரிசனம் மேற்கொள்ள வைத்து புதிய வருடத்தில் வாழ்க்கை இனிமையாக அமையப் பழங்களையும், வாழ்வில் அனைத்து செல்வங்களும் நிறைய வேண்டும் என்பதற்காக வெற்றிலை பாக்கு வைத்து பணம் வைத்து விஷு கை நீட்டம் கொடுப்பதை பாரம்பரியமாக செய்து வருகிறார்கள்.

இதையே கோவையில் வாழும் மலையாள மொழி பேசும் மக்களும் பாரம்பரியம் மாறாமல் மலையாள வருடப்பிறப்பை உற்சாகமாக வரவேற்பர்.



இந்த பண்டிகையையொட்டி, கோவையில் புகழ்பெற்ற சித்தாபுதூர் ஆலயம் முழுவதும் பூக்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது.



மூலவர் ஐயப்ப சாமிக்கு கொன்றை பூக்களால் சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டு இருந்தது.



மேலும் ஆலயத்திற்கு வந்த பக்தர்கள் அனைவருக்கும் கோவில் பூசாரிகள் சாமி சிலைகள் முன்பு வைத்துப் பூஜிக்கப்பட்ட நாணயங்களை வழங்கினார்கள்.



பக்தர்களும் தங்களது குடும்பத்தினருடன் நீண்ட வரிசையில் நின்று சிறப்பு சாமி தரிசனம் மேற்கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...