தாராபுரத்தில் ஓய்வுபெற்ற அரசு அலுவலர் வீட்டில் ரூ.10,000 கொள்ளை - மர்ம ஆசாமிகள் கைவரிசை!

தாராபுரம் அடுத்த கொண்டரசம்பாளையம் பகுதியை ஓய்வு பெற்ற அரசு அலுவலரான நடராஜன் (68) வீட்டின் பின்பக்க கதவை உடைத்து பீரோவில் இருந்த ரூ.10,000 பணத்தை திருடிச்சென்ற மர்ம நபர்களை போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிரமாக தேடி வருகின்றனர்.



திருப்பூர்: தாராபுரம் அருகே ஓய்வு பெற்ற அரசு அலுவலர்ன் வீட்டின் பின்பக்க கதவை உடைத்து ரூ,10,000 பணத்தை மர்ம நபர்கள் திருடி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தாராபுரம் அடுத்த கொண்டரசம்பாளையம் அருகே உள்ள எஸ்.என்.நகரை சேர்ந்தவர் நடராஜன் (68). அரசு பணியில் இருந்து ஓய்வபெற்ற அரசு அலுவலரான இவர், நேற்று முன்தினம் மாலை அருகில் உள்ள கோவிலுக்கு சென்றுள்ளார்.

இதனை நோட்மிட்ட மர்ம ஆசாமிகள் வீட்டின் பின்புறத்தில் உள்ள கதவின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்து பீரோவில் வைத்திருந்த ரூ.10 ஆயிரத்தை திருடிச் சென்றுள்ளனர்.

இந்நிலையில், வீட்டுக்கு திரும்பிய நடராஜன் வீட்டின் பின் கதவு திறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்து உள்ளார். பின்னர், வீட்டின் உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் இருந்த துணிகள், பொருட்கள் கலைந்து கிடந்துள்ளது.

மேலும், அதில் இருந்த ரூ.10ஆயிரம் பணம் திருட்டு போனதும் தெரியவந்தது. இதுகுறித்து நடராஜன் தாராபுரம் காவல்நிலையத்தில், புகார் அளித்துள்ளார்.

இந்த புகாரின் பேரில் காவல் ஆய்வாளர் மணிகண்டன் வழக்குப்பதிவு செய்து அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து மர்ம ஆசாமிகளை தேடும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...