ஆரம்ப சுகாதார நிலையங்களில் கொரோனா பரிசோதனையை கட்டாயமாக்குக - சமூக ஆர்வலர்கள் கோரிக்கை!

கொரோனா பரவல் மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ள நிலையில், தாராபுரத்தில் உள்ள அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்வதை கட்டாயமாக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


திருப்பூர்: தாராபுரம் வட்டார பகுதியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் கட்டாய கொரோனா பரிசோதனை செய்யப்பட வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

தாராபுரம் நகராட்சி மற்றும் சுற்றுவட்டார பகுதியில் சுமார் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் வசிக்கும் குழந்தைகள் முதல் பெரியோர்கள் வரை சளி, காய்ச்சல், உடல் வலி ஆகியவை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக தெரிவிக்கின்றனர்.

மேலும் அவ்வாறு உடல் நிலை சரியில்லாத போது இவர்கள் பெரும்பாலும் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக செல்லும் நோயாளிகளுக்கு மருந்து, மாத்திரை கொடுத்து அனுப்பி வைக்கின்றனர்.

சிலர் தனியார் மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்று வருகின்றனர். தற்போது தமிழகத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ள நிலையில் நேற்று முன்தின நிலவரப்படி 2 ஆயிரத்து 500-க்கும் மேற்பட்டோர் கொரோனா தொற்றுக்கு பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

மேலும் பொதுமக்களிடையே போதிய விழிப்புணர்வு இல்லாததால் சிலர் மர்ம காய்ச்சலுக்கு இறந்ததாக மக்களிடையே கருத்து நிலவி வருகிறது. இந்த சூழ்நிலையில் தமிழக அரசு தாராபுரம் வட்டார பகுதியில் உள்ள அனைத்து அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் கட்டாயமாக கொரோனா பரிசோதனை மேற்கொள்ள மாவட்ட சுகாதார துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இதன் காரணமாக கொரோனா தொற்றிலிருந்து தங்களை பாதுகாத்து கொள்ள முடியும். எனவே அரசு உடனடியாக கொரோனா பரிசோதனைகளை அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களில் பரிசோதனைகளை கட்டாயமாக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...