கோவை கே.ஜி.திரையரங்கில் புதுப்பிக்கப்பட்ட திரையை திறந்து வைத்த நடிகர் ராகவா லாரன்ஸ்!

ருத்ரன் திரைப்படம் பெரும் வரவேற்பை பெற்றுள்ள நிலையில், பொதுமக்கள், ரசிகர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக கோவைக்கு வந்த நடிகர் ராகவா லாரன்ஸ், கோவை கே.ஜி. திரையரங்கில் புதுப்பிக்கப்பட்ட ஒரு திரையை திறந்து வைத்தார்.



கோவை: கோவை கே.ஜி. திரையரங்கில் புதுப்பிக்கப்பட்ட திரையரங்கை நடிகர் ராகவா லாரன்ஸ் இன்று திறந்து வைத்தார்.

இயக்குநர் கதிரேசன் இயக்கத்தில் நடிகர் ராகவா லாரன்ஸ் நடிப்பில் அண்மையில் வெளியான ருத்ரன் திரைப்படம் பல்வேறு மக்களிடையே வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில் பொதுமக்களுக்கும் ரசிகர்களுக்கும் நன்றி தெரிவிக்கும் நிகழ்வாக நடிகர் ராகவா லாரன்ஸ் மற்றும் இயக்குனர் கதிரேசன் ஆகியோர் கோவைக்கு வருகை புரிந்தனர்.



அப்போது கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் உள்ள கே.ஜி. திரையங்கில் புதுப்பிக்கப்பட்ட ஒரு திரையை நடிகர் ராகவா லாரன்ஸ் திறந்து வைத்தார்.



இந்நிகழ்வில் கேஜி திரையரங்கின் நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.



இந்நிகழ்விற்கு பின் செய்தியாளர்களை சந்தித்த ராகவா லாரன்ஸ் பேசியதாவது, மூன்று வருடங்கள் கழித்து ருத்ரன் படம் மூலம் ரசிகர்களை காண்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். இந்தப் படத்தில் பெற்றோர்களை பிரிந்து இருக்கும் குழந்தைகள் குறித்து நல்ல கருத்து எடுத்துக் கூறப்பட்டுள்ளது.

கொரோனா காலக்கட்டத்திற்கு முன்பு இருந்த மக்களின் மனநிலை தற்போது மாறிவிட்டது, சிறிய படமாக (Low Budget) இருந்தாலும் நல்ல கதை இருந்தால் அனைவரும் அதனை வரவேற்பார்கள். இப்படத்தில் பணியாற்றிய அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் எனது நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

மேலும் ஜொர்தால பாடலை நிகழ்ச்சி ஒன்றுக்கு செல்லும் பொழுது கேட்டேன், அப்போது அந்த பாடல் எனக்கு மிகவும் பிடித்துவிட்டது. இந்த பாடலுக்கு நான் ஆட வேண்டும் என விரும்பி இதனை இயக்குனரிடம் தெரிவித்தேன்.

தற்பொழுது உள்ள இளைஞர்கள் அவர்களது பாடல்களை youtube போன்ற வலைத்தளங்களில் பதிவிட்டு அவர்களின் திறமைகளை வெளிகொணர்ந்து வருகிறார்கள். ஒரு சிறிய இடைவெளி விட்டு காஞ்சனாவின் அடுத்த பாகத்தை மீண்டும் எடுக்கலாம்.

சந்திரமுகி இரண்டாம் பாகம் குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், அனைத்தும் இயக்குனர் பி.வாசு பார்த்துக் கொள்கிறார். நான் முழுக்க முழுக்க அவரிடம் கொடுத்து விட்டேன். பலருக்கும் உதவி புரிவதை நான் மட்டும் தான் செய்கிறேன் என கூற முடியாது. பலரும் அதனை செய்கிறார்கள்,

நான் மட்டுமல்லாது அனைத்து நடிகர்களின் சார்பிலும் தான் உதவி செய்து வருகிறேன். ருத்ரனை யாராலும் அழிக்க முடியாது, அவர் வந்துவிட்டார் ருத்ரதாண்டவத்தை ஆடி வருகிறார். இதற்கு சிவனுக்கு தான் நன்றி சொல்ல வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.



இந்த நிகழ்வில் செய்தியாளர்களை சந்தித்த ருத்ரன் படத்தின் இயக்குனர் கதிரேசன், இந்த படத்திற்கு அனைவரும் நல்ல வரவேற்பு அளித்துள்ளனர். இதில் வாழ்க்கையை குடும்பத்தினருடன் வாழ வேண்டும் முக்கியமாக தந்தை தாயுடன் வாழ வேண்டும் என்ற ஒரு நல்ல கருத்தை எடுத்து கூறியுள்ளோம்.

இந்த படத்தை பார்த்து விட்டு பெற்றோர்களை பிரிந்து உள்ள பலரும் தங்களை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு அவர்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

சிறுவாணி அணை நீர்மட்டம் 12 அடியாக சரிவு - கோவையில் குடிநீர் பாதிப்பு அபாயம்

கோயமுத்தூர் மாநகராட்சியின் பல வார்டுகளுக்கு குடிநீர் வழங்கும் சிறுவாணி அணையின் நீர்மட்டம் தற்போது 12 அடியாக குறைந்துள்ளத...

தமிழக வெற்றி கழகத்தின் வெற்றியை கோவை நீதிமன்ற வளாகம் முன் பட்டாசு வெடித்து கொண்டாடிய வழக்கறிஞர்கள்

கோவையில் தமிழக வெற்றி கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றதை கட்சியின் வழக்கறிஞர் அணியினர் நீதிமன்ற வாயிலில் பட்டாசு வெடித...

கோவை, திருப்பூர் அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை, திருப்பூர் மாவட்ட அணைகளில் டிசம்பர் 5 நிலவரப்படி மழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது; ஆழியாறு, பரம்பிக்குளம், சோல...

எதிர்க்கட்சியாக மக்களின் நலனுக்காக தொடர்ந்து திமுக போராடும் – முதல்வர் மு.க. ஸ்டாலின்

தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து, திமுக தலைவர் முக ஸ்டாலின்  வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களுக்காக சிறப்பாக ஆளும் கட்சியாக...

கோவையில் 5 தொகுதிகளில் த.வெ.க முன்னிலை – ஜி.சி.டி முன்பு பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

கோவை மாவட்டத்தில் 5 தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை பெற்ற நிலையில், ஓட்டுகள் எண்ணப்படும் ஜி.சி.டி கல்லூரி வளாக...

தமிழக அரசியலில் புதிய திருப்பம்: தவெக முன்னிலை, மூத்த கட்சிகள் பின்னடைவு

தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளில் காலை 9 மணி நிலவரப்படி தவெக 38 இடங்களில் முன்னிலையில் உள்ளது. முதல் முறையாக தேர...