பீர் பாட்டில்களை கவனமாக கையாளுங்கள்..! - கோவை டாஸ்மாக் பணியாளர்களுக்கு வலியுறுத்தல்

கோவை காரமடை பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில் பீர்பாட்டில் வெடித்த விபத்தில் ஊழியர் செந்தில்குமார் என்பவரின் கண்ணில் பாதிப்பு பார்வை பறிபோயுள்ளது. இதையடுத்து, டாஸ்மாக் கடைகளில் பீர்பாட்டில்களை கையாளும்போது கவனமாக செயல்படுமாறு ஊழியர்களுக்கு சிஐடியு டாஸ்மாக் ஊழியர் சங்கம் அறிவுறுத்தியுள்ளது.


கோவை: பீர் பாட்டில்களை கவனமாக கையாள வேண்டும் என்று கோவை டாஸ்மாக் பணியாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கோவை வடக்கு மாவட்டத்தில் காரமடையில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் கடை எண்:1806 ல் செந்தில்குமார் என்ற ஊழியர் விற்பனையாளராகப் பணிபுரிந்து வருகிறார். நேற்று வழக்கம்போல் பணியில் இருந்த சமயத்தில், விற்பனையின்போது பீர்பாட்டிலில் அவர் ஸ்டிக்கர் ஒட்டியுள்ளார். அப்போது பீர் பாட்டில் வெடித்து, செந்தில்குமாரின் இடது கண்ணில் உடைந்த கண்ணாடித்துண்டுகள் பட்டதில், அவரது கருவிழி பாதிக்கப்பட்டு பார்வை இழப்பு ஏற்பட்டுள்ளது.



பாதிக்கப்பட்ட செந்தில்குமார் தற்போது கோவை R.S.புரம் ஐ பவுண்டேசனில் சிகிச்சை பெற்று வருகிறார். தகவலறிந்த கோவை மாவட்ட மேலாளர் (வடக்கு) நேரில் சென்று செந்திகுமாரிடம் உடல் நலம் விசாரித்து மருத்துவமனையில் விரைவாக சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்துள்ளார்.

இந்நிலையில், செந்தில்குமார் பூரண குணமடைய வேண்டும் என்று வேண்டிக்கொள்வோம் என்றும், டாஸ்மாக்கில் பணியாற்றி வரும் ஊழியர்கள், விற்பனையின்போது பீர்பாட்டிலை கையாளும்போது மிகவும் கவனமுடன் செயல்பட வேண்டும் என்று சிஐடியு டாஸ்மாக் ஊழியர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...