விஷூ பண்டிகைக்கு 14 டன் காய்கறிகள் - கோவையிலிருந்து ஷார்ஜாவுக்கு விமானத்தில் ஏற்றுமதி

கோவையிலிருந்து ஷார்ஜாவுக்கு விமான மூலம் கடந்த ஒரு வாரத்தில் 14 டன் காய்கறிகள் விஷூ பண்டிகை கொண்டாட்டத்திற்காக ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. கோடை விடுமுறையையொட்டி, உள்நாடு மற்றும் வெளிநாட்டு விமான சேவையின் எண்ணிக்கை அதிகரிக்கப்படவுள்ளதாக விமானநிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


கோவை: கோவையிலிருந்து ஷார்ஜாவுக்கு வாரத்தில் ஐந்து நாட்கள் விமான சேவை வழங்கப்படுகிறது.

ஒவ்வொரு முறையும் 3 டன் எடையிலான சரக்குகள் இந்த விமானத்தில் கொண்டு செல்லப்படுவது வழக்கம். மலையாளிகளின் புத்தாண்டான விஷூ முன்னிட்டு கடந்த ஒரு வாரத்தில் காய்கறிகள் மட்டுமே அதிக எடையளவு கையாளப்பட்டுள்ளன.

இதுகுறித்து விமான நிலைய அதிகாரிகள் கூறுகையில்,

மலையாள புத்தாண்டை முன்னிட்டு கடந்த 7 நாட்களில் கோவையிலிருந்து வழங்கப்பட்ட 5 விமான சேவையில் மொத்தம் 15 டன் எடையிலான சரக்குகள் கோவையிலிருந்து சார்ஜாவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டன. இவற்றில் 14 டன் எடையிலான சரக்குகள் காய்கறிகள்.

கோவக்காய், வாழைக்காய், பீன்ஸ், வெங்காயம் உள்ளிட்ட காய்கறிகள் ஏற்றுமதி செய்யப்பட்டன. இவை தவிர்த்து 1 டன் எடையிலான மாங்காய் மற்றும் ரோஜாப்பூ, சூரியகாந்திப்பூ உள்ளிட்ட மலர்களும் புக்கிங் செய்யப்பட்டு, விமானம் மூலம் ஏற்றுமதி செய்யப்பட்டதாக தெரிவித்தனர்.

மேலும், கோவை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து தினமும் சென்னை, பெங்களூரு, டெல்லி, மும்பை உள்ளிட்ட பல்வேறு நகரங்களுக்கும் ஷார்ஜா, சிங்கப்பூர் உள்ளிட்ட வெளிநாடுகளுக்கும் விமான சேவை வழங்கப்பட்டு வருகிறது.

தற்போது தினமும் 25 விமானங்கள் இயக்கப்பட்டுவரும் நிலையில், பள்ளி, கல்லூரிகளுக்கு கோடை கால விடுமுறை தொடங்கியுள்ளதால், எதிர்வரும் நாட்களில் விமான சேவை அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...