மருத்துவக் கழிவுகள் அகற்றும் விவகாரம் - கோவையில் கண்டன ஆர்ப்பாட்டம்

மருத்துவக் கழிவுகளை எடுக்க பெறப்படும் கட்டணத்தை குறைக்க வேண்டும், மாநகராட்சி நிர்வாகமே கழிவுகளை குறைந்த கட்டணத்தில் எடுக்க வேண்டும் என வலியுறுத்தி கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு பாரா மெடிக்கல் லேப் எஜுகேஷன் மற்றும் வெல்ஃபேர் அசோசியேஷன் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


கோவை: கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு மருத்துவ கழிவுகள் அகற்றுவது குறித்து இரண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பாரா மெடிக்கல் லேப் எஜுகேஷன் மற்றும் வெல்ஃபேர் அசோசியேஷன் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.



இதில், மருத்துவ கழிவுகளை குறைந்த கட்டணத்தில் மாநகராட்சி நிர்வாகமே எடுக்க வேண்டும் என்றும், கோவை, பொள்ளாச்சி, திருப்பூர், உடுமலைப்பேட்டையில் இருக்கும் சிறு மற்றும் நடுத்தர ஆய்வகங்களுக்கு மருத்துவக் கழிவுகளை எடுக்க தனியார் நிறுவனத்தால் மாதம்தோறும் வசூலிக்கப்படும் 2000 முதல் 2800 வரையிலான கட்டணத்தை 750 ஆக குறைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.



பாரா மெடிக்கல் லேப் கல்வி மற்றும் நலச்சங்கத்தின் அகில இந்திய தலைவர் காளிதாசன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு, பொதுச் செயலாளர் ரவீந்திரநாத், மாவட்ட தலைவர் சிவக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் சுமார் 50க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு, 2 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

மேலும், இந்த கோரிக்கையை மாவட்ட ஆட்சித் தலைவர், முதலமைச்சர் தனிப்பிரிவு, மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர், கோவை வடக்கு மற்றும் தெற்கு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் ஆகியோருக்கும் இவர்கள் மனுவாக அனுப்ப உள்ளது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...