கொரோனா பரவல் எதிரொலி - கோவை நீதிமன்றங்களில் இன்று முதல் முகக்கவசம் கட்டாயம்!

தமிழகம் உட்பட நாடு முழுவதும் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து நீதிமன்றங்களில் கட்டாய முகக்கவசம் அணியும் உத்தரவு இன்று முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.


கோவை: சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் மதுரை கிளையில் கடந்த ஏப்.,10 முதல், சில வழக்குகள் நேரடியாகவும், சில வழக்குகள், இணையதளம் மூலமும் விசாரிக்கப்பட்டு வருகின்றது. இந்த வசதியையும், வழக்குகளை 'இ- பைலிங்' முறையில் தாக்கல் செய்யும் வசதியையும், வழக்கறிஞர்கள் பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

இந்நிலையில், கொரோனா பரவல் தடுப்பு முன்னெச்சரிக்கையாக, தமிழகம், புதுச்சேரியில் உள்ள உயர் நீதிமன்றங்கள், கீழமை நீதிமன்றங்களில், முகக்கவசம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக, சென்னை உயர் நீதிமன்ற தலைமை பதிவாளர் பி.தனபால் கடந்த சில தினங்களுக்கு முன் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருநதார்.



அதன்படி, கோவை மாவட்டத்தில் இன்று முதல் நீதிமன்ற அலுவலர்கள், ஊழியர்கள், வழக்கறிஞர்கள் உள்ளிட்டோர், முகக்கவசம் அணிவது, கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. தனிமனித இடைவெளியை பின்பற்றுவது, கைகளை அடிக்கடி கழுவுவது ஆகிய நடவடிக்கைகள் கட்டாய மாக்கப்படுகின்றன.



வழக்கு பட்டியலில் இடம்பெறாத நிலையில், வழக்கறிஞர்கள் நீதிமன்றத்துக்கு வருவதைத் தவிர்க்க வேண்டும். நீதிமன்ற அறை, நீதிபதிகள் அறை, நீதிமன்ற வளாகங்களில், கிருமி நாசினி தெளிக்க வேண்டும். நீதிமன்ற அறை நுழைவு வாயில், முக்கிய இடங்களில் 'சானிடைசர்' வைக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...