காவல்துறையில் நேரடி உதவி ஆய்வாளர்களுக்கு பதவி உயர்வு வழங்குக..! - சட்டப்பேரவையில் அறிவிப்பு வெளியாகுமா?

தமிழக காவல் துறையில் நேரடி உதவி ஆய்வாளராக 11 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றும் காவலர்களுக்கு பதவி உயர்வு வழங்க கோரிக்கை எழுந்துள்ளது. நடப்பு சட்டமன்றக் கூட்டத் தொடரில் முதலமைச்சர் இதற்கான அறிவிப்பை வெளியிடுவார் என காவல் உதவி ஆய்வாளர்கள் எதிர்பார்த்துள்ளனர்.


தமிழக காவல் துறையில் நேரடி உதவி ஆய்வாளராக 11 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றும் காவலர்களுக்கு பதவி உயர்வு வழங்க கோரிக்கை எழுந்துள்ளது.

இது குறித்து உதவி ஆய்வாளர்கள் கடிதம் ஒன்றை பகிர்ந்துவருகின்றனர். அதில், தமிழக காவல்துறையின் முதுகெலும்பாக திகழ்வது நேரடி உதவி ஆய்வாளர் பதவி ஆகும். பொதுமக்கள் தங்களுக்கு ஏற்படும் துன்பங்களுக்கு உடனடியாக அணுகும் இடமாக காவல் நிலையங்கள் திகழ்கின்றன.

அக்காவல் நிலையங்களில் முக்கியமான பதவியாக உதவி ஆய்வாளர் பதவி திகழ்கிறது. சட்டம் ஒழுங்கை சீரிய முறையில் நிலைநாட்ட இளையவர்களால் விரைவாகவும் வேகமாகவும் செயல்பட முடியும் என்ற காரணத்தால் நேரடி உதவி ஆய்வாளர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள்.

தமிழகத்தில் மற்ற அரசு துறைகளில் பணியில் சேருபவர்களுக்கு 5 ஆண்டுகளில் பதவி உயர்வு கிடைத்துவிடுகிறது. மேலும், தமிழக காவல்துறையில் இரண்டாம் நிலை காவலர்களாக தேர்வு செய்யப்படுபவர்களுக்கு 10 ஆண்டுகளில் பதவி உயர்வு வழங்கப்படுகிறது. ஆனால் நேரடி உதவி ஆய்வாளர்களாக தேர்வு செய்யப்படுபவர்களை யாரும் கண்டு கொள்வதில்லை.

2011ம் ஆண்டு நேரடி உதவி ஆய்வாளர்களாக தேர்வு செய்யப்பட்ட சுமார் 900 உதவி ஆய்வாளர்கள் 12 ஆண்டுகள் கடந்தும் இதுநாள் வரை ஒரு பதவி உயர்வு கூட கிடைக்காமல் பறிதவித்து வருகிறார்கள். நேரடியாக உதவி ஆய்வாளர்கள் தேர்ந்தெடுக்கப்படுவதன் நோக்கமே அவர்கள் ஊக்கத்துடனும் உற்சாகத்துடனும் பணியாற்றி காவல்துறைக்கு வலுச்சேர்ப்பார்கள் என்பதால்தான்.

ஆனால், 12 ஆண்டுகள் ஆகியும் உரிய காலத்தில் பதவி உயர்வு அளிக்கப்படாததால் அவர்கள் உற்சாகம் இழந்து மனச்சோர்வுடன் பணியாற்ற கூடிய சூழல் நிலவுகிறது. இம்மனச்சோர்வு விரைந்து பணியாற்ற வேண்டிய காவல்துறை பணிகளில் சுனக்கத்தை ஏற்படுத்த நேரிடலாம்.

கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்பு திமுக ஆட்சி காலத்தில் தமிழக காவல்துறையில் முதன் முதலாக பெண் காவலர்கள் நியமிக்கப்பட்டதை நினைவு கூறும் விதமாக சமீபத்தில் நடைபெற்ற பொன்விழா ஆண்டு கூட்டத்தில் பேசிய மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள், தமிழக பெண் காவலர்கள் மகிழ்ச்சி கொள்ளும் விதமாக பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார்.

அதேபோல், கடந்த 2010 ஆண்டு திமுக ஆட்சியில் தேர்வு செய்யப்பட்ட நேரடி உதவி ஆய்வாளர்களில் சுமார் 300க்கும் மேற்பட்ட பெண் உதவி ஆய்வாளர்கள் பணிக்கு நியமிக்கப்பட்டனர். அவர்களுக்கும் தற்போது நடைபெற்று வரும் தமிழக சட்டபேரவை கூட்டத் தொடரில் மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் அறிவிப்பார் என்ற எதிர்பார்ப்புடன் காத்துக்கொண்டிருக்கிறார்கள்.

தமிழகம் முழுவதும் பல காவல் நிலையங்கள் இன்னமும் உதவி ஆய்வாளர்கள் பதவி நிலையில் இருந்து வருகிறது. அக்காவல் நிலையங்களை ஆய்வாளர் பதவி நிலைக்கு உயர்த்தினால் பொதுமக்களின் குறைகள் விரைவில் தீர்வுகாண ஏதுவாக இருக்கும். நேரடி உதவி ஆய்வாளராக பணியில் சேர்ந்து 10 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றவரால் பொதுமக்களின் குறைகளை விரைந்து தீர்வு காண ஏதுவாக இருக்கும்.

மேலும், பல காவல் நிலையங்களில் குற்றபிரிவு ஆய்வாளர் பதவி ஏற்படுத்தப்படாமல் உள்ளன. அவற்றிலும் ஆய்வாளர் பதவிகளை ஏற்படுத்தினால் குற்றங்களை கட்டுப்படுத்தவும் நிலுவையில் உள்ள வழக்குகளையும் விரைந்து கண்டுபிடித்து குற்றவாளிகளுக்கு தகுந்த தண்டனை பெற்ற தரவும் முடியும்.

மற்ற மாநிலங்களோடு ஒப்பிடுகையில், சட்டம் ஒழுங்கை சிறப்பாக நிலைநாட்டி அமைதி பூங்காவாக தமிழகத்தை திகழ வைத்துக் கொண்டிருக்கும் தமிழக காவல்துறையினர், சவாலான இக்காலகட்டத்தில் கூடுதல் உற்சாகத்தோடும் உத்வேகத்தோடும் பணியாற்ற வேண்டியது அவசியம் ஆகிறது.

காவல்துறையின் ஆணிவேராக விளங்கும் உதவி ஆய்வாளர்கள் உற்சாகம் கொள்ளத்தக்க வகையில், அவர்களின் மனச்சோர்வினை போக்கும் விதமாக பதவி உயர்வு குறித்து சட்டசபை கூட்டத் தொடரில் முதல்வர் அறிவிப்பு வெளியிடுவார்கள் என்ற எதிர்ப்பார்ப்புடன் 2011 ஆம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்ட நேரடி உதவி ஆய்வாளர்கள் 900 பேர் காத்துக்கொண்டிருக்கிறார்கள்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...