கோவையில் போலீஸ் எனக்கூறி ரியல் எஸ்டேட் அதிபரை கடத்தி தங்கம் பறித்த கும்பல்

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை பாவக்கல்லை சேர்ந்தவர் சஜீவ் (42). ரியல் எஸ்டேட் அதிபரான இவரை 7பேர் கொண்ட கும்பல் போலீஸ் எனக் கூறி கோவை அழைத்து வந்து ரூ.12 லட்சம் மதிப்பிலான தங்கத்தை பறித்து சென்றனர். இதுகுறித்து கோவை காட்டூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


கோவை: போலீஸ் எனக்கூறி ரியல் எஸ்டேட் அதிபரை கடத்தி ரூ.12 லட்சம் மதிப்பிலான தங்கம் பறித்த கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை பாவக்கல்லை சேர்ந்தவர் சஜீவ் (42). இவர் பெங்களூர் டாலர் கம்பெனி பகுதியில் வசித்து வருகிறார். இவரது குடும்பத்தினர் சென்னை பல்லாவரத்தில் வசிக்கின்றனர்.

சஜீவ் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இந்நிலையில், சில நாட்களுக்கு முன்பு சென்னையிலிருந்து செல்போனில் சஜீவை தொடர்பு கொண்டு பேசிய சிலர், கிருஷ்ணகிரியில் நிலம் வாங்க வேண்டும் என கூறியுள்ளனர்.

அதன்படி, கடந்த 8ஆம் தேதி சஜீவ் கிருஷ்ணகிரியில் உள்ள ஒரு ஓட்டலில் அறை எடுத்து தங்கினார். மேலும் நிலம் வாங்க சென்னையிலிருந்து வந்த நபர்களுக்கு நிலம் விற்பனை செய்வதற்கான பணிகளில் ஈடுபட்டிருந்தார்.

இந்நிலையில், கடந்த 10ஆம் தேதி 7 பேர் கொண்ட கும்பல் ஓட்டல் அறைக்கு வந்தனர். அப்போது தனியாக இருந்த சஜீவிடம், நிலம் மற்றும் இரிடியம் விற்பனை செய்வதாக பொதுமக்களை ஏமாற்றி வருகிறீர்கள், அது தொடர்பாக விசாரிக்க வேண்டும் எனக் கூறி அவரை காரில் கடத்தி சென்றனர்.

அங்கிருந்து கரூர், நாமக்கல் உள்ளிட்ட பல பகுதிகளுக்கு அழைத்து சென்று அவரின் சொத்து விவரங்களை கேட்டு மிரட்டியுள்ளனர். இதைத்தொடர்ந்து கோவை அழைத்து வந்து காந்திபுரத்தில் உள்ள ஒரு ஓட்டலில் அறை எடுத்த 7 பேர் கொண்ட கும்பல் அங்கு சஜீவை அடைத்து வைத்தனர்.

அப்போது சஜீவுக்கு தெரிந்த ஜிப்சன், சிபின் மற்றும் அலெக்ஸ் ஆகிய 3 பேர் வந்தனர். பின்னர் 10 பேரும் சேர்ந்து சஜீவிடம் ரூ.30 லட்சம் பணம் கேட்டு மிரட்டினர். அவர் அதற்கான ஏற்பாடுகளை செய்வதாகவும், தன்னிடம் இருந்த ரூ.10 ஆயிரத்தை கொடுத்துள்ளார்.

பின்னர் அந்த கும்பல் அவரிடம் இருந்த ரூ.12 லட்சம் மதிப்பிலான 30 பவுன் எடையுள்ள தங்க செயின், பிரேஸ்லெட் மற்றும் 3 மோதிரத்தை மிரட்டி பறித்ததாக தெரிகிறது. தொடர்ந்து சஜீவை காரில் ஏற்றி சென்று சேலம் செல்லும் வழியில் ஒரு டோல்கேட்டில் இறக்கி விட்டு அந்த கும்பல் தப்பி சென்றனர். இந்த மர்ம கும்பல் காரில் கடத்தி சென்றுள்ளனர்.

இது குறித்து சஜீவ் கோவை காட்டூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிந்து கார் பதிவெண்ணை வைத்து ரியல் எஸ்டேட் அதிபரை காரில் கடத்தி, ரூ.12 லட்சம் தங்கத்தை பறித்து சென்ற 10 பேர் கொண்ட கும்பலை தேடி வருகின்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...