விவசாயிகளுக்கு மானிய விலையில் பேட்டரி ஸ்பிரேயர் - உடுமலை வேளாண்மைத்துறை அறிவிப்பு

உடுமலைபகுதி விவசாயிகளுக்கு மானிய விலையில் பேட்டரி ஸ்பிரேயர் மற்றும் வேளாண் கருவிகள் விற்பனைக்கு வந்துள்ளதாக உடுமலை வேளாண்மைத்துறை தெரிவித்துள்ளது. தேவைப்படும் விவசாயிகள், ஆதார், சிட்டா, வங்கி பாஸ்புக் ஆகியவற்றின் நகல் மற்றும் புகைப்படத்துடன் வந்து வாங்கிச் செல்லலாம் எனவும் அறிவித்துள்ளது.


திருப்பூர்: உடுமலை மற்றும சுற்றுப்பகுதி விவசாயிகளுக்கான உடுமலை வேளாண்மை துறை சார்பில் செய்திக் குறிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

அதில், திருப்பூர் மாவட்டம் உடுமலை வேளாண்மை உழவர் நலத்துறையில் பேட்டரி ஸ்பிரேயர் மானிய விலையில் விற்பனைக்கு உள்ளது. தேவைப்படும் விவசாயிகள் கம்ப்யூட்டர் சிட்டா, ஆதார் அட்டை நகல், பேங்க் பாஸ்புக் முன்பக்க நகல், போட்டோ ஓன்றுஆகிய ஆவணங்களை கொடுத்து வாங்கிக்கொள்ளலாம் என்றும், முழுவிலை-ரூ.4450 மானியம்-2000.

மேலும், கீழக்கண்ட விவசாய உபகரணங்கள் தொகுப்பு 50% மானிய விலையில் உள்ளது.

கடப்பாரை-1 ,

மண்வெட்டி-1

களைக்கொத்து-1,

கதிர்அருவாள் 1

மண்அள்ளும் சட்டி-1 ஆகிய பொருட்கள் மானியத்தில் உள்ளது.

தேவைப்படும விவசாயிகள், கம்ப்யூட்டர் சிட்டா, ஆதார் அட்டைநகல், பேங்க்பாஸ்புக் முன்பக்க நகல், போட்டோ-1 ஆகிய ஆவணங்களைக் கொடுத்து வாங்கி பயன்பெறவும். முழுவிலை-ரூ 3079 ஆகும். இது தொடர்பாக விவசாயிகள் உடுமலை வேளாண்மை அலுவலகத்தையும். உதவி வேளாண்மை அலுவலர் அமல்ராஜ் என்பவரை 9751293606 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ள வேண்டும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...