தமிழகம் முழுவதும் ஏப்.20ல் கதவு அடைப்பு போராட்டம் - கோவையில் போசியா கூட்டமைப்பு அறிவிப்பு!

தமிழகத்தில் மின்சார நிலைக்கட்டண உயர்வு ரத்து உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து நாளை மறுநாள் (ஏப்.20) மாநிலம் தழுவிய கதவைடைப்புப் போராட்டம் நடத்தவுள்ளதாக போசியா கூட்டமைப்பு அறிவித்துள்ளது. அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பும் போராட்டமும் நடத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


கோவை: மின்சார நிலைக்கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, வரும் 20 ஆம் தேதி, தமிழகம் முழுவதும் ஒரு நாள் கதவு அடைப்பு போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக, 23 தொழில் அமைப்புகள் இணைந்த போசியா கூட்டமைப்பினர் அறிவித்துள்ளனர்.



இதுகுறித்து செய்தியாளர்களிடம் டான்சியா தலைவர் மாரியப்பன் பேசியதாவது:

8 ஆண்டுகாலம் மின்சார கட்டணத்தை உயர்த்தாமல் தற்போது உயர்த்தி தண்டனையாக கொடுத்துள்ளனர். தமிழக அரசு, மின்சார வாரியம் எங்களது கோரிக்கையை செவிசாய்க்கவில்லை. தாழ்வு அழுத்த மின்சாரத்தை பயன்படுத்துவோர் கட்டணத்தை 35 ரூபாயை 150 ரூபாயாகவும், 350 ரூபாயை 550 ரூபாயாகவும் உயர்த்தியுள்ளது.

தொழில் நடத்தினாலும், நடத்தாவிட்டாலும் மின்சார கட்டணத்தை செலுத்தும் வகையில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மின்சார நிலைக்கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும். பீக் ஹவரை 3 மணி நேரம் என்பதை 8 மணி நேரமாக உயர்த்தி இரட்டை தண்டனைபோல செய்துள்ளனர்.



காலை 6 மணி முதல் 10 மணி, மாலை 6 மணி முதல் 10 மணி வரை என 8 மணி நேரம் உயர்த்தப்பட்டு உள்ளது. மீட்டர் பொருத்த வேண்டிய பொருப்பு மின்சார வாரியத்திற்குதான் உண்டு.

தொழில் அமைப்புகளை மின்சார வாரியம் ஏமாற்றி வருகிறது. கிலோவாட்டை குறைத்துத் தரச்சொன்னால் ரூ.5 லட்சம் பணம் செலுத்த சொல்கின்றனர். மின்சாரம் வேண்டாம் என்றாலும் பணம் கேட்கின்றனர். இரட்டிப்பு தண்டனையை எம்.எஸ். எம்.இ., துறைக்கு மின்சார வாரியம் வழங்கியுள்ளது.

நெசவாளர்களுக்கு மின் சலுகைகள் வழங்கியதை வரவேற்கிறோம்.



மாற்றாந்தாய் கண்ணோட்டத்தோடு எம்.எஸ்.எம்.இ., பார்ப்பதை அரசு மாற்றிக்கொள்ள வேண்டும். சட்டமன்றத்தில் எம்.எஸ்.எம்.இ., மின்சார வாரியத்தால் பாதிப்பில்லை எனக்கூறியது தவறு. நாங்கள் 6 மாதத்திற்கு மேல் காத்திருந்தோம். எம்.எஸ்.எம்.இ, இலவசம் கேட்கவில்லை.

எங்களால் முடிந்தளவு செலுத்தும் வகையில் மின் கட்டணத்தை குறைக்கவே கேட்கிறோம். தமிழகத்தில் உள்ள 130 சிட்கோ பேட்டைகளில் 24 தொழிற்பேட்டைகளுக்கு 99 வருட குத்தகை முறையை ரத்து செய்ய வேண்டும். நில மனைகளை விற்பனை பத்திரமாக வழங்கக்கோரி ஜெயலலிதா காலத்தில் போராடி 30 ஆண்டுகால குத்தகையை பெற்றோம். எம்.எஸ்.எம்.இ., க்கான நல வாரியம் அமைத்து தரக்கோரி பல ஆண்டுகாலம் கேட்டு வருகிறோம்.

General insurance corporation limited மூலம் அரசு பாலிசி எடுத்து கட்டணம் செலுத்த வேண்டும் உள்ளிட்ட அரசால் நியமிக்கப்பட்டுள்ள குழு 50 பரிந்துரைகள் செய்துள்ளது. இதனை தமிழக அரசு அமல்படுத்த வேண்டும். இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற 20 ஆம் தேதி அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு அமைதிவழி போராட்டமும், ஒரு நாள் வேலை நிறுத்தமும் செய்ய உள்ளோம்.

இவ்வாறு, அவர் தெரிவித்தார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...