மௌலானா அபுல் கலாம் ஆசாத் பாடப்பகுதி நீக்கம் - கோவையில் இந்திய மாணவர் சங்கம் போராட்டம்

தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி குழு அண்மையில் வெளியிட்டுள்ள வரலாற்று பாடநூலில் முகலாயர்களின் வரலாற்றையும் இந்தியாவின் முதல் கல்வி அமைச்சராக இருந்த மௌலானா அபுல் கலாம் ஆசாத் பற்றிய பாடத்தையும் நீக்கியதை கண்டித்து கோவையில் இந்திய மாணவர் சங்கம் சார்பில் போராட்டம் நடைபெற்றது.


கோவை: தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி குழு அண்மையில் வெளியிட்டுள்ள வரலாற்று பாடநூலில், முகலாயர்களின் வரலாற்றையும் இந்தியாவின் முதல் கல்வி அமைச்சராக இருந்த மெளலானா அபுல் கலாம் ஆசாத் பற்றிய பாடத்தையும் நீக்கி உள்ளது.

இதற்கு நாடு முழுவதும் பல்வேறு அமைப்புகள், கட்சியினர் எதிர்ப்புகளை தெரிவித்து கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர்.

அதன் தொடர்ச்சியாக இன்று இந்திய மாணவர் சங்கத்தினர் நாடு தழுவிய போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.



அதன் ஒரு பகுதியாக கோவையில் அரசு கலைக்கல்லூரி முன்பு இந்திய மாணவர் சங்கத்தினர், இந்திய வரலாற்றை மத்திய இருட்டடிப்பு செய்வதாக கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர்.



மாவட்டத் தலைவர் ரமேஷ் கண்ணன் தலைமையில் நடைபெற்ற இந்தப் போராட்டத்தில், மாவட்ட செயலாளர் அசாருதீன், மாவட்டத் துணைச் செயலாளர் சந்தோஷ் உட்பட பலர் கலந்து கொண்டு மத்திய அரசுக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

Newsletter

கோவை கற்பகம் உயர்கல்வி நிறுவனத்தில் புதிய Pre-Incubation Centre மற்றும் Startup Studio தொடக்கம்

கோவை கற்பகம் உயர்கல்வி நிறுவனத்தின் 'கற்பகம் புத்தாக்கம் மற்றும் இன்குபேஷன் கவுன்சில்' (KIIC), தனது புதிய 'Pre-Incubatio...

2016 ஆனைமலை இளைஞர் கொலை வழக்கில் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை: கோவை மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பு

ஆனைமலை காவல் நிலையத்தில் குற்ற எண் 369/2016-ன் கீழ் பதிவான கொலை வழக்கில், மீனாட்சிபுரத்தைச் சேர்ந்த பாப்பான் @ சுதானந்தம...

ஜெம் வீரமணி வழக்கு: கோவை காவல் ஆணையர் உள்பட 2 ஐபிஎஸ் அதிகாரிகள் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்

ஜெம் வீரமணி வழக்கு தொடர்பாக கோவை மாநகர காவல் ஆணையர் Dr.N.கண்ணன் மற்றும் கூடுதல் ஆணையர் அருண் ஆகிய இரு மூத்த ஐபிஎஸ் அதிகா...

கோவை–போத்தனூர் இடையே பராமரிப்பு பணி: செப்.25, 26-ல் இரு மெமு ரயில் சேவையில் மாற்றம்

செப்டம்பர் 25 மற்றும் 26, 2026 ஆகிய தேதிகளில் கோவை-போத்தனூர் ரயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாள பராமரிப்பு பணிகள் நடைபெற...

கோவையில் பார் ஊழியரை கத்தியால் மிரட்டி பணம் பறித்த ரவுடி கைது

கோவை புலியகுளம் ரோடு பங்கஜாமில் ரோடு பகுதியில் உள்ள சன்ரிச் 11 - 11 பாரில் ஊழியர் பாண்டியராஜனிடம் இலவச மதுபானம் கேட்டு ம...

கோவை தடாகம் சாலையில் ஆம்புலன்ஸ் பணிமனையில் தீ விபத்து

கோவை தடாகம் சாலையில் உள்ள கோயில்மேடு அருகே ஆம்புலன்ஸ் பணிமனையில் திடீரென தீ பரவியது. இதனால் கரும்புகை மேகங்களாக சுற்றுவட...