ஜெம் வீரமணி வழக்கு: கோவை காவல் ஆணையர் உள்பட 2 ஐபிஎஸ் அதிகாரிகள் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்

ஜெம் வீரமணி வழக்கு தொடர்பாக கோவை மாநகர காவல் ஆணையர் Dr.N.கண்ணன் மற்றும் கூடுதல் ஆணையர் அருண் ஆகிய இரு மூத்த ஐபிஎஸ் அதிகாரிகள் திடீரென காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளனர். 2024-ஆம் ஆண்டு சிறுமிகள் மீதான பாலியல் குற்றங்கள் தொடர்பாக ஜெம் வீரமணிக்கு எதிராக வீடியோ ஆதாரங்களுடன் காங்கிரஸ் நிர்வாகி ரஞ்சன் புகார் அளித்ததாக தெரிவித்திருந்தார். புகார் அளிக்கப்பட்டும் உடனடி நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்த நிலையில், இப்போது இருவரும் காவல் துறையின் தீவிர கண்காணிப்பில் உள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


Coimbatore: ஜெம் வீரமணி வழக்கின் பின்னணியில் கோவை மாநகர காவல் ஆணையர் Dr.N.கண்ணன் மற்றும் கூடுதல் ஆணையர் அருண் ஆகிய இரு மூத்த ஐபிஎஸ் அதிகாரிகள் திடீரென காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளனர். இந்த நடவடிக்கை காவல் துறை வட்டாரத்தில் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 2024-ஆம் ஆண்டு சிறுமிகள் மீதான பாலியல் குற்றங்கள் தொடர்பாக, ஜெம் வீரமணிக்கு எதிராக தன்னிடம் இருந்த வீடியோ ஆதாரங்களுடன் காவல் துறையில் புகார் அளித்ததாக காங்கிரஸ் நிர்வாகி ரஞ்சன் தெரிவித்திருந்தார்.

அக்காலகட்டத்தில் சென்னையில் கூடுதல் ஆணையராகப் பணியாற்றிய கண்ணன் மற்றும் ஆணையர் அருண் ஆகியோரை நேரில் சந்தித்து இந்த புகாரை அளித்ததாக ரஞ்சன் கூறியுள்ளார்.

ஆனால், புகார் அளிக்கப்பட்டும் அதன்பேரில் உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது. மேலும் ஜெம் வீரமணி விவகாரத்தில் முதன்முதலில் புகார் அளிக்கப்பட்ட உயர் அதிகாரிகள் இவர்கள்தான் என்று தகவல்கள் வெளியாக்கப்பட்ட நிலையில், தற்போது இவர்கள் இருவர் மீதும் இந்த அதிரடி நடவடிக்கை பாய்ந்துள்ளது.

மேலும், காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்ட ஐபிஎஸ் அதிகாரிகள் அருண் மற்றும் கண்ணன் ஆகிய இருவருமே தற்போது காவல் துறையின் தீவிர கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இவ்வழக்கில் அடுத்தடுத்து மூத்த அதிகாரிகள் மீது எடுக்கப்பட்டு வரும் இந்நடவடிக்கை, தமிழக காவல் துறை வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை உருவாக்கியுள்ளது.

Newsletter

கோவை கற்பகம் உயர்கல்வி நிறுவனத்தில் புதிய Pre-Incubation Centre மற்றும் Startup Studio தொடக்கம்

கோவை கற்பகம் உயர்கல்வி நிறுவனத்தின் 'கற்பகம் புத்தாக்கம் மற்றும் இன்குபேஷன் கவுன்சில்' (KIIC), தனது புதிய 'Pre-Incubatio...

2016 ஆனைமலை இளைஞர் கொலை வழக்கில் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை: கோவை மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பு

ஆனைமலை காவல் நிலையத்தில் குற்ற எண் 369/2016-ன் கீழ் பதிவான கொலை வழக்கில், மீனாட்சிபுரத்தைச் சேர்ந்த பாப்பான் @ சுதானந்தம...

ஜெம் வீரமணி வழக்கு: கோவை காவல் ஆணையர் உள்பட 2 ஐபிஎஸ் அதிகாரிகள் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்

ஜெம் வீரமணி வழக்கு தொடர்பாக கோவை மாநகர காவல் ஆணையர் Dr.N.கண்ணன் மற்றும் கூடுதல் ஆணையர் அருண் ஆகிய இரு மூத்த ஐபிஎஸ் அதிகா...

கோவை–போத்தனூர் இடையே பராமரிப்பு பணி: செப்.25, 26-ல் இரு மெமு ரயில் சேவையில் மாற்றம்

செப்டம்பர் 25 மற்றும் 26, 2026 ஆகிய தேதிகளில் கோவை-போத்தனூர் ரயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாள பராமரிப்பு பணிகள் நடைபெற...

கோவையில் பார் ஊழியரை கத்தியால் மிரட்டி பணம் பறித்த ரவுடி கைது

கோவை புலியகுளம் ரோடு பங்கஜாமில் ரோடு பகுதியில் உள்ள சன்ரிச் 11 - 11 பாரில் ஊழியர் பாண்டியராஜனிடம் இலவச மதுபானம் கேட்டு ம...

கோவை தடாகம் சாலையில் ஆம்புலன்ஸ் பணிமனையில் தீ விபத்து

கோவை தடாகம் சாலையில் உள்ள கோயில்மேடு அருகே ஆம்புலன்ஸ் பணிமனையில் திடீரென தீ பரவியது. இதனால் கரும்புகை மேகங்களாக சுற்றுவட...