காந்திபுரம் மேம்பாலத்தில் கவிழ்ந்த தண்ணீர் லாரியால் பரபரப்பு!

கோவை காந்திபுரம் உயர்மட்ட மேம்பாலத்திலிருந்து கீழே இறங்கிய தண்ணி லாரி திடீரென கட்டுப்பாட்டை இழந்து, கவிழ்ந்ததால் லாரியில் இருந்த தண்ணீர் முழுவதும் சாலையில் பெருக்கெடுத்து ஓடியது.


கோவை: காந்திபுரம் உயர்மட்ட மேம்பாலத்திலிருந்து கீழே இறங்கிய தண்ணி லாரி திடீரென கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.



கோவை காந்திபுரம் உயர் மட்டும் மேம்பாலம் அவிநாசி சாலை மற்றும் சத்தி சாலையை இணைக்கும் மேம்பாலமாக உள்ளது இந்த மேம்பாலத்தில் சக்தி சாலையிலிருந்து அவிநாசி சாலையை நோக்கி வந்து கொண்டிருந்த தண்ணீர் லாரி இறங்கும்போது பிரேக் பிடிக்காத காரணத்தினால் திடீரென நிலை தடுமாறி கவிழ்ந்து விழுந்தது.



லாரியை ஓட்டி வந்த ஓட்டுநர் கார்த்தி சிறிய காயங்களுடன் உயிர் தப்பினார். லாரியில் இருந்த அனைத்து தண்ணீரும் சாலையில் பெருக்கெடுத்து ஓடியது.



சாலையில் இருந்து கீழே செல்லக்கூடிய வாகனங்கள் திடீரென லாரி கவிழ்ந்ததால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. உடனடியாக அப்பகுதிக்கு வந்த போக்குவரத்து காவலர்கள் போக்குவரத்தை சரி செய்தனர்.



லாரியின் உரிமையாளர் ரமேஷ் சம்பவ இடத்திற்கு வந்து லாரியை மீட்கும் பணியில் ஈடுபட்டார். அவரிடம் கேட்டபோது இன்று தான் புதிதாக ஓட்டுநர் கார்த்தி பணியில் சேர்ந்தார் என்றும், இரண்டு முறை கணபதி சாலையிலிருந்து பார்கேட் பகுதிக்கு தண்ணீர் கொண்டு வந்து ஊற்றிவிட்டு மூன்றாவது முறையாக தண்ணீர் கொண்டு வரும்போது வண்டி நிலை தடுமாறி கவிழ்ந்து விட்டதாகவும், ஓட்டுநர் கார்த்தியை மருத்துவமனைக்கு சிகிச்சை பெற அனுப்பி விட்டதாக கூறினார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...