புதிய தொழிற்பயிற்சி நிலையங்கள் தொடங்க வாய்ப்பு - கோவை ஆட்சியர் அழைப்பு

கோவை மாவட்டத்தில் புதிய தொழிற் பயிற்சி நிலையங்கள் தொடங்க இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி அழைப்பு விடுத்துள்ளார்.


கோவை: கோவை மாவட்ட ஆட்சித்தலைவர் கிராந்திகுமார் பாடி புதிய தொழிற்பயிற்சி நிலையங்கள் தொடங்குவது குறித்த அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், புதிய தொழிற்பயிற்சி நிலையங்கள் தொடங்குதல், அரசு-தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் புதிய தொழில் பிரிவுகள், கூடுதல் அலகுகள் தொடங்குதல் மற்றும் இடமாற்றம் செய்வதற்கு www.nimionlineadmission.in/iti என்ற இணையதளத்தில் வருகிற 25.04.2023 வரை விண்ணப்பிக்கலாம்.

அதன்படி, தொழிற்பயிற்சி நிலையங்கள் இல்லாத பஞ்சாயத்து யூனியன்களில் குறைந்தபட்சம் 4 தொழிற்பிரிவுகளுடன் புதிய தொழிற்பயிற்சி நிலையம் தொடங்க விண்ணப்பிக்கலாம்.

4 தொழிற்பிரிவுகளுக்கு குறைவாக நடைபெற்றுக்கொண்டிருக்கும் தொழிற்பயிற்சி நிலையங்கள், புதிய தொழிற்பிரிவுகள் தொடங்கிடவும் மற்றும் கூடுதல் அலகுகள் தொடங்கிடவும், தொழிற்பயிற்சி நிலையங்கள் இடமாற்றம் செய்யவும் விண்ணப்பிக்கலாம்.

இவ்வாறு, அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...