கோவையில் ஜோதிடம் பார்ப்பதாக கூறி நகை, பணம் பறிப்பு - மர்ம நபருக்கு போலீஸ் வலைவீச்சு!

கோவை அடுத்த கிணத்துக்கடவு அருகே வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியிடம் ஜோசியம் பார்ப்பதாக கூறி பணம் மற்றும் நகைகளை நூதனமாக பறித்து சென்றது குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபரை தீவிரமாக தேடி வருகின்றனர்.


கோவை: கிணத்துக்கடவு அருகே ஜோசியம் பார்ப்பதாக கூறி மூதாட்டியிடம் மர்ம நபர் ஒருவர் பணம் மற்றும் நகைகளை பறித்துச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு பகுதியை சேர்ந்த 65 வயது மூதாட்டி ஒருவர் வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது அந்த வழியாக 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் வந்துள்ளார், அவர் ஜோதிடம் பார்க்க வேண்டுமா ஜோதிடம் என சத்தம் போட்டபடி சென்றார்.

அந்த வாலிபர் மூதாட்டியை பார்த்து ஏற்கனவே இந்த வீட்டில் 2 உயிர் போய் உள்ளது. மீண்டும் இந்த மாதத்தில் ஒரு உயிர் போக உள்ளது. அவரை காப்பாற்ற வேண்டும் என்றால் பரிகாரம் செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார்.

இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த மூதாட்டி, உடனடியாக அந்த வாலிபரை அழைத்து உயிர் போகாமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என கேட்டுள்ளார். உடனடியாக அந்த வாலிபர் மூதாட்டியிடம் நீங்கள் அணிந்து இருக்கும் நகைகளை கழற்றி என்னிடம் கொடுங்கள் நான் சாமி முன்பு வைத்து பரிகாரம் செய்து விட்டு தருகிறேன் என்று கூறியுள்ளார்.

இதனை உண்மை என நம்பிய மூதாட்டி தான் அணிந்து இருந்த செயின், மோதிரம் உள்பட 3 பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ.17,000 பணத்தை அந்த வாலிபரிடம் கொடுத்தார். அந்த வாலிபர் மூதாட்டியிடம் 21 நாட்களுக்கு இதனை யாரிடம் சொல்ல கூடாது. அவ்வாறு கூறினால் பரிகாரம் பலிக்காமல் போய்விடும் என கூறிவிட்டு அங்கு இருந்து சென்றுள்ளார்.

மூதாட்டி தனது மகன் வந்ததும் நடந்த சம்பவங்களை அவரிடம் கூறியதை கேட்டு அதிர்ச்சியடைந்த அவர், இதுகுறித்து கிணத்துக்கடவு போலீசில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் உயிர் பலி ஏற்படாமல் தடுக்க பரிகாரம் செய்ய வேண்டும் எனக்கூறி மூதாட்டியை ஏமாற்றி நகை மற்றும் பணத்தை பறித்து சென்ற வாலிபரை தேடி வருகின்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...