கோவை அருகே இருசக்கர வாகனம் தீவைத்து எரிப்பு - தப்பியோடிய நபரைத் தேடும் போலீஸ்!

கோவை செல்வபுரம் பகுதியில் முத்துராஜ் என்பவரது இருசக்கர வாகனம் தீவைத்து எரிக்கப்பட்டது. இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த செல்வபுரம் போலீசார், நாசர் என்ற நபரைத் தேடி வருகின்றனர்.


கோவை: கோவை மைக்கல் பகுதியைச் சேர்ந்தவர் நாசர். இவர் மீது இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசிய வழக்கு உட்பட பல வழக்குகள் உள்ளன.

நாசரின் இரண்டாவது மனைவி சமீரா கோவை செல்வபுரம் பகுதியில் உள்ள மகேஸ்வரி என்பவரது சிப்ஸ் கடையில் வேலை பார்த்து வந்துள்ளார்.

நாசர் முதல் மனைவியின் வீட்டிலேயே இருந்து விடுவார், உனது வீட்டிற்குவர மாட்டார் என கடை உரிமையாளர் மகேஸ்வரி, சமீராவிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனால், சமீரா கடந்த ஒரு வாரமாக நாசரிடம் சண்டையிட்டு வந்துள்ளார்.

இதனால், ஆத்திரமடைந்த நாசர், மகேஸ்வரியை போனில் அழைத்து திட்டியுள்ளார். இந்நிலையில், இன்று அதிகாலை மகேஸ்வரியின் வீட்டிற்கு சென்ற நாசர், மகேஸ்வரியின் மகன் முத்துராஜின் இருசக்கர இரு சக்கர வாகனத்தை தீவைத்து எரித்து விட்டு தப்பி ஓடினார். வாகனம் தீப்பிடித்து எரிவதை பார்த்த மகேஸ்வரி உடனடியாக தீயை அணைக்க முயற்சி மேற்கொண்டார்.

ஆனால், தீயில் முழுமையாக இரு சக்கரவாகனம் எரிந்து நாசமானது. இதுகுறித்து, செல்வபுரம் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், தலைமறைவாகியுள்ள நாசரை பிடிக்க போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...