வடவள்ளி அருகே தண்ணீர் பக்கெட்டில் மூழ்கி ஒரு வயது பெண் குழந்தை பலியான சோகம்!

கோவை வடவள்ளி அருகே வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த ஒரு வயது பெண் குழந்தை வீடு துடைத்து விட்டு வைக்கப்பட்ட தண்ணீர் பக்கெட்டுக்குள் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


கோவை: வடவள்ளி அருகே தண்ணீர் பக்கெட்டில் மூழ்கி ஒரு வயது பெண் குழந்தை உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோவை வடவள்ளி அடுத்த இ.பி.காலனி பகுதியை சேர்ந்தவர் ஐடி ஊழியர் பாக்கியராஜ் (33). இவருக்கு காயத்ரி என்ற பெண்ணுடன் திருமணமாகி 6 ஆண்டுகள் ஆகிய நிலையில், 5 வயதில் ஒரு பெண் குழந்தையும், 1 வயதில் வர்ஷிகா, வர்ணிகா என்ற இரட்டை பெண் குழந்தைகளும் இருந்தனர்.

இந்நிலையில், நேற்று இரவு வழக்கம் போல சமையல் வேலைகளை முடித்த காயத்ரி, தண்ணீர் ஊற்றி வீட்டை சுத்தம் செய்து விட்டு, பாதியளவு தண்ணீருடன் பக்கெட்டை வீட்டின் ஒரு அறையில் வைத்துவிட்டு தூங்கச் சென்றுள்ளார்.

வழக்கம் போல காயத்ரி காலையில் சமைத்துக் கொண்டிருந்த போது, இரட்டை குழந்தைகள் அறையில் விளையாடிக் கொண்டு இருந்தனர். அப்போது குழந்தை வர்ஷிகா (1) தண்ணீர் பக்கெட் அருகே விளையாடிக் கொண்டிருந்த போது, பக்கெட் தண்ணீருக்குள் தவறி தலைகீழாக விழுந்துள்ளது.



இதனால் அங்கிருந்த வர்ணிகா சத்தம் போடவே, அழுகை சத்தம் கேட்டு காயத்ரி வெளியே வந்து பார்தத போது, குழந்தை வர்ஷிகா தண்ணீர் மூழ்கியிருந்தது தெரியவந்தது. குழந்தையை மீட்ட காயத்ரி கணவர் பாக்கியராஜ் உதவியுடன் குழந்தையை அருகே இருந்த தனியார் மருத்துவமனைக்கு கொண்டுச் சென்றனர்.

அங்கிருந்த மருத்துவர்கள் குழந்தையை மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு குழந்தையை பரிசோதனை செய்த மருத்துவர்கள் வரும் வழியிலேயே உயிரிழந்ததாக தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து குழந்தை பிரேத பரிசோதனைக்கு பின் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. இச்சம்பவம் தொடர்பாக வடவள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோவையில் இருசக்கர வாகன திருட்டு, கத்தி முனையில் மிரட்டல்: மூவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கோவை மாவட்டம் கோமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருசக்கர வாகன திருட்டு மற்றும் கத்தி முனையில் மிரட்டல் வழக...

கோவையில் மத்திய அரசு மானிய யூரியா பதுக்கல்: 7 பேர் மீது வழக்கு; வாகன ஓட்டுநர்கள் 2 பேர் கைது - குடோன்களுக்கு சீல்..!

கோவை மாவட்டத்தில் மத்திய அரசின் மானிய விலை வேப்ப எண்ணெய் தடவிய யூரியாவை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த விவகாரத்தில் 7...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு மாணவர்களுக்கு போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கோவை...

கோவை-சக்தி சாலையில் வாகன சோதனை; விதிமீறிய ஏர் ஹாரன், LED விளக்குகள் அகற்றம் - அபராதம் விதிப்பு

கோவை-சக்தி சாலையில் விபத்து அபாயத்தை ஏற்படுத்தும் வகையில் விதிமுறைகளுக்கு புறம்பாக ஏர் ஹாரன்கள் மற்றும் உயர் ஒளித்திறன்...

கோயம்புத்தூரில் ரூ.12.28 கோடி மதிப்பீட்டில் உள்விளையாட்டு அரங்குகள் - ஆட்சித்தலைவர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள இறகுபந்து, கபடி, கைப்பந்து உள்விளையாட்டு அரங்குகள் மற...

கோவை சித்தாபுதூர் மாநகராட்சி பள்ளிக்கு சூரிய சக்தியில் இயங்கும் நாப்கின் எரிப்பு இயந்திரம் வழங்கல்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில், ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி மாணவிகள் உருவாக்கிய சூரிய...