மூன்றாவது முறையாக பிரதமர் மோடி ஆட்சியை பிடிப்பார்..! - கோவையில் அர்ஜூன் சம்பத் பேச்சு

கோவையில் இந்து மக்கள் கட்சி நிறுவன தலைவர் அர்ஜூன் சம்பத்தின் பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய அர்ஜூன் சம்பத், பிரதமர் மோடி மூன்றாவது முறையாக வெற்றி பெற்று ஆட்சியைப் பிடிப்பார் என்று தெரிவித்தார்.


கோவை: கோவையில் இந்து மக்கள் கட்சி (தமிழகம்) நிறுவன தலைவர் அர்ஜூன் சம்பத்தின் 58-வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது.

கோவை, இந்து மக்கள் கட்சி (தமிழகம்) நிறுவன தலைவர் அர்ஜூன்ச ம்பத்தின் 58-வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் கோவை சித்தாபுதூர் வி.கே.கே.மேனன் ரோட்டில் நடந்தது. கட்சி நிர்வாகிகள் குருமூர்த்தி, திருமுருகன் மற்றும் மலுமிச்சம் பட்டி பாபுஜி சுவாமிகள் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் அர்ஜூன் சம்பத் பேசியதாவது:-

கோவையில் அ.தி.மு.க. கொண்ட வந்த திட்டங்கள் தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. சொத்து வரியை உயர்த்த மாட்டோம் என்று கூறிய தி.மு.க.வினர் ஆட்சிக்கு வந்ததும் அதை உயர்த்தி உள்ளனர். நீட் தேர்வை தி.மு.க.வால் ரத்து செய்ய முடியாது. ஆனால் அதுதொடர்பாக பொய்யான பிரசாரம் செய்து வருகிறார்கள்.

தமிழகத்தில் இந்துக்களுக்கு எதிரான எதிர்ப்பு அரசியல் செய்கிறார்கள்.தி.மு.க. குடும்ப அரசியல் செய்து வருகிறது. மோடி சமூகத்தை அவதூறாக பேசியதால் ராகுல்காந்தியின் பதவி பறிபோனது. பொய்யான வரலாறுகளை கூறுபவர்கள் தி.மு.க.வினர்.

கோவை மாவட்டத்தில் பா.ஜ.க. வளர்ந்து வருகிறது. அதேபோல் இந்து அமைப்புகளும் வளர்ந்து வருகிறது. தமிழகத்தை 3 மாநிலமாக பிரிக்க வேண்டும். அதில் கொங்கு மண்டலத்தை தனி மாநிலமாக வருவாக்க வேண்டும். வருகிற பாராளுமன்ற தேர்தலில் 3-வது முறையாக மோடி ஆட்சியை பிடிப்பார். இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக நல்லாம்பாளையத்தில் இந்து மக்கள் கட்சியின் செயற்குழு கூட்டம் நடந்தது.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:

பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பு இந்து மக்கள் கட்சியில் புதிய உறுப்பினர்கள் சேர்க்கை முகாம் மாவட்டம் தோறும் நடத்த வேண்டும்.

பாராளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் பாரதீய ஜனதாவுக்கு ஆதரவாக களப்பணியாற்றுவோம், மோடியை மீண்டும் பிரதமர் ஆக்குவோம். பாரதீய ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை ஜூன் மாதம் மேற்கொள்ள உள்ள நடைப்பயணத்துக்கு இந்து மக்கள் கட்சி முழு ஆதரவு அளித்து கலந்து கொள்ளும். மதம் மாறியவர்களுக்கு அரசு சாதி சான்றிதழ் வழங்குவதை தடை செய்ய வேண்டும். இல்லையெனில் போராட்டம் நடத்தப்படும்.

அரசு ஊழியருக்கான பழைய பென்சன் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். அரசு மருத்துவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்.

மேற்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Newsletter

கோவையில் இருசக்கர வாகன திருட்டு, கத்தி முனையில் மிரட்டல்: மூவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கோவை மாவட்டம் கோமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருசக்கர வாகன திருட்டு மற்றும் கத்தி முனையில் மிரட்டல் வழக...

கோவையில் மத்திய அரசு மானிய யூரியா பதுக்கல்: 7 பேர் மீது வழக்கு; வாகன ஓட்டுநர்கள் 2 பேர் கைது - குடோன்களுக்கு சீல்..!

கோவை மாவட்டத்தில் மத்திய அரசின் மானிய விலை வேப்ப எண்ணெய் தடவிய யூரியாவை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த விவகாரத்தில் 7...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு மாணவர்களுக்கு போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கோவை...

கோவை-சக்தி சாலையில் வாகன சோதனை; விதிமீறிய ஏர் ஹாரன், LED விளக்குகள் அகற்றம் - அபராதம் விதிப்பு

கோவை-சக்தி சாலையில் விபத்து அபாயத்தை ஏற்படுத்தும் வகையில் விதிமுறைகளுக்கு புறம்பாக ஏர் ஹாரன்கள் மற்றும் உயர் ஒளித்திறன்...

கோயம்புத்தூரில் ரூ.12.28 கோடி மதிப்பீட்டில் உள்விளையாட்டு அரங்குகள் - ஆட்சித்தலைவர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள இறகுபந்து, கபடி, கைப்பந்து உள்விளையாட்டு அரங்குகள் மற...

கோவை சித்தாபுதூர் மாநகராட்சி பள்ளிக்கு சூரிய சக்தியில் இயங்கும் நாப்கின் எரிப்பு இயந்திரம் வழங்கல்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில், ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி மாணவிகள் உருவாக்கிய சூரிய...