உடுமலை அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறக்க விவசாயிகள் கோரிக்கை!

உடுமலை சுற்றுவட்டாரப் பகுதிகளில் 2ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் நெல் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. தற்போது தண்ணீர் பற்றாக்குறை உள்ளதால், பயிர்கள் அனைத்தும் கருகுகின்றன. பயிர்களை காப்பாற்ற அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.


திருப்பூர்: அமராவதி அணையிலிருந்து தண்ணீர் திறந்து விடக்கோரி விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகேயுள்ள அமராவதி அணை வாயிலாக, திருப்பூர், கரூர் மாவட்டத்திலுள்ள, 54,637 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. அமராவதி பழைய ஆயக்கட்டு பாசனத்திலுள்ள, கல்லாபுரம், ராம குளம் உள்ளிட்ட ராஜ வாய்க்கால் பாசனத்திற்கு, கடந்தாண்டு, மே 16ல் தண்ணீர் திறக்கப்பட்டு, இரு போக சாகுபடிக்கு நீர் வழங்கப்பட்டு, கடந்த மார்ச் 31ல் நிறைவு செய்யப்பட்டது.



இந்நிலையில் கல்லாபுரம், ராமகுளம் பகுதியில் சுமார் 2 ஆயிரம் ஏக்கரில், நெல் சாகுபடி தாமதமாக துவக்கப்பட்டது. அணையிலிருந்து பாசனத்திற்கு நீர் திறப்பு நிறுத்தப்பட்டுள்ள நிலையில், அறுவடைக்கு தயாராக ஒரு மாதம் வரை உள்ள நெற்பயிர்கள் தண்ணீர் இல்லாமல் கருகுகின்றன. இந்த பயிர்களை காப்பாற்ற நீர் திறக்க வேண்டும், என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.

Newsletter

கோவையில் இருசக்கர வாகன திருட்டு, கத்தி முனையில் மிரட்டல்: மூவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கோவை மாவட்டம் கோமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருசக்கர வாகன திருட்டு மற்றும் கத்தி முனையில் மிரட்டல் வழக...

கோவையில் மத்திய அரசு மானிய யூரியா பதுக்கல்: 7 பேர் மீது வழக்கு; வாகன ஓட்டுநர்கள் 2 பேர் கைது - குடோன்களுக்கு சீல்..!

கோவை மாவட்டத்தில் மத்திய அரசின் மானிய விலை வேப்ப எண்ணெய் தடவிய யூரியாவை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த விவகாரத்தில் 7...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு மாணவர்களுக்கு போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கோவை...

கோவை-சக்தி சாலையில் வாகன சோதனை; விதிமீறிய ஏர் ஹாரன், LED விளக்குகள் அகற்றம் - அபராதம் விதிப்பு

கோவை-சக்தி சாலையில் விபத்து அபாயத்தை ஏற்படுத்தும் வகையில் விதிமுறைகளுக்கு புறம்பாக ஏர் ஹாரன்கள் மற்றும் உயர் ஒளித்திறன்...

கோயம்புத்தூரில் ரூ.12.28 கோடி மதிப்பீட்டில் உள்விளையாட்டு அரங்குகள் - ஆட்சித்தலைவர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள இறகுபந்து, கபடி, கைப்பந்து உள்விளையாட்டு அரங்குகள் மற...

கோவை சித்தாபுதூர் மாநகராட்சி பள்ளிக்கு சூரிய சக்தியில் இயங்கும் நாப்கின் எரிப்பு இயந்திரம் வழங்கல்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில், ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி மாணவிகள் உருவாக்கிய சூரிய...