சென்னை தலைமை செயலகம் முன்பு காத்திருப்பு போராட்டம் - விவசாய சங்கம் அறிவிப்பு

தாராபுரம் அருகே நல்லதங்காள் நீர் தேக்க அணைக்கு 720 ஏக்கர் நிலம் கொடுத்த விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்காததை கண்டித்து வருகின்ற 13ஆம் தேதி சென்னை தலைமைச் செயலகத்தில் தொடர் காத்திருப்பு போராட்டம் நடத்தப் போவதாக விவசாய சங்கம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


திருப்பூர்: நிலம் வழங்கிய விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்காததை கண்டித்து காத்திருப்பு போராட்டம் நடத்தப்போவதாக விவசாய சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.



திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள எழுகாம்வலசு கிராமத்தில் உள்ள அம்மன் கோவில் வளாகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.



இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கோனேரிப்பட்டி, பொன்னிவாடி, எழுகாம்வலசு கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் சுமார் 120 நபர்களிடம் நல்லதங்காள் அணை கட்டுவதற்கு சுமார் 720 ஏக்கர் கையகப்படுத்தப்பட்டு நல்லதங்காள் அணை கடந்த 20 வருடங்களுக்கு முன்பு கட்டப்பட்டது.



இந்த அணை கட்டுவதற்கு நஷ்ட ஈடாக ஒரு ஏக்கருக்கு 9000 மானாவாரி பூமிக்கும் ஒரு ஏக்கர் தோட்ட பூமிக்கு 27000 நஷ்ட ஈடாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. மேற்படி தொகை மிகவும் குறைவாக இருந்ததால் விவசாயிகள் ஆட்சேபனை தெரிவித்து நஷ்டஈடு தொகை அதிகம் பெறுவதற்கு மனு தாக்கல் செய்தனர்.

அந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் மானாவாரி பூமிக்கு ஏக்கர் ஒன்றுக்கு 70 ஆயிரம் ரூபாயும் தோட்ட பூமிக்கு ஏக்கர் ஒன்றுக்கு ஒரு லட்ச ரூபாயும் மேற்படி தொகைக்கு 15 சதவீத வட்டியும் ஆறுதல் தொகை மற்றும் கூடுதல் சிறப்பு தொகை மற்றும் செலவு தொகையை வழங்க உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.



இந்நிலையில் நிலம் எடுக்கப்பட்ட விவசாயிகளுக்கு இதுவரை 120 விவசாயிகளுக்கு நஷ்ட ஈடாக கொடுக்காததால் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் நிறுவனத் தலைவர் ஈசன் முருகசாமி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.



இந்த ஆலோசனை கூட்டத்தில் நல்லதங்காள் நீர்த்தேக்க அணைக்கு நிலம் கொடுத்த விவசாயிகள் கலந்து கொண்டனர் மேலும் வருகின்ற 13-ஆம் தேதி சென்னை தலைமைச் செயலகத்தில் 120 விவசாயிகளுக்கும் உரிய இழப்பீட்டுத் தொகை வழங்கும் வரை தொடர் காத்திருக்கும் போராட்டம் நடைபெறும் எனத் தெரிவித்தார். இதில் பாதிக்கப்பட்ட விவசாயிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை கற்பகம் உயர்கல்வி நிறுவனத்தில் புதிய Pre-Incubation Centre மற்றும் Startup Studio தொடக்கம்

கோவை கற்பகம் உயர்கல்வி நிறுவனத்தின் 'கற்பகம் புத்தாக்கம் மற்றும் இன்குபேஷன் கவுன்சில்' (KIIC), தனது புதிய 'Pre-Incubatio...

2016 ஆனைமலை இளைஞர் கொலை வழக்கில் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை: கோவை மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பு

ஆனைமலை காவல் நிலையத்தில் குற்ற எண் 369/2016-ன் கீழ் பதிவான கொலை வழக்கில், மீனாட்சிபுரத்தைச் சேர்ந்த பாப்பான் @ சுதானந்தம...

ஜெம் வீரமணி வழக்கு: கோவை காவல் ஆணையர் உள்பட 2 ஐபிஎஸ் அதிகாரிகள் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்

ஜெம் வீரமணி வழக்கு தொடர்பாக கோவை மாநகர காவல் ஆணையர் Dr.N.கண்ணன் மற்றும் கூடுதல் ஆணையர் அருண் ஆகிய இரு மூத்த ஐபிஎஸ் அதிகா...

கோவை–போத்தனூர் இடையே பராமரிப்பு பணி: செப்.25, 26-ல் இரு மெமு ரயில் சேவையில் மாற்றம்

செப்டம்பர் 25 மற்றும் 26, 2026 ஆகிய தேதிகளில் கோவை-போத்தனூர் ரயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாள பராமரிப்பு பணிகள் நடைபெற...

கோவையில் பார் ஊழியரை கத்தியால் மிரட்டி பணம் பறித்த ரவுடி கைது

கோவை புலியகுளம் ரோடு பங்கஜாமில் ரோடு பகுதியில் உள்ள சன்ரிச் 11 - 11 பாரில் ஊழியர் பாண்டியராஜனிடம் இலவச மதுபானம் கேட்டு ம...

கோவை தடாகம் சாலையில் ஆம்புலன்ஸ் பணிமனையில் தீ விபத்து

கோவை தடாகம் சாலையில் உள்ள கோயில்மேடு அருகே ஆம்புலன்ஸ் பணிமனையில் திடீரென தீ பரவியது. இதனால் கரும்புகை மேகங்களாக சுற்றுவட...