வால்பாறையில் 108 ஆம்புலன்ஸ் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து - ஓட்டுநர், நோயாளி பலி

கோவை மாவட்டம் வால்பாறையில் 108 ஆம்புலன்ஸ் வாகனம் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், ஓட்டுநர் காளிதாஸ் மற்றும் சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்ட நோயாளி சிவகுமார் இருவரும் உயிரிழந்தனர்.



கோவை: கோவை மாவட்டம் வால்பாறையில் அரசு மருத்துவமனைக்கு பாரளை எஸ்டேட் பகுதியில் இருந்து சிவகுமார் என்பவரை சிகிச்சைக்காக 108 வாகனத்தின் மூலம் வால்பாறை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

மருத்துவமனை சாலை பகுதியில் வாகனத்தை நிறுத்திவிட்டு நோயாளியை அழைத்து செல்ல வாகனத்தின் பின்புறம் கதவை திறக்க ஓட்டுநர் காளிதாஸ் இறங்கி உள்ளார். அப்போது, வாகனம் பிரேக் பிடிக்காமல் பின்புறமாக வந்து பள்ளத்தில் விழுந்து விபக்குள்ளானது.



இதில், ஓட்டுநர் காளிதாஸ் மேல் ஆம்புலன்ஸ் வாகனம் ஏறி இறங்கியதில், அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.



நோயாளி சிவக்குமார் வாகனத்தின் அடியில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார்.



நோயாளி சிவக்குமாரின் மனைவி சாந்திக்கு பலத்த காயம் ஏற்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். 108 ஆம்புலன்ஸ் வாகனம் விபத்துக்குள்ளாகி 2 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த விபத்து குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

கோவை மேற்கு மண்டலத்தில் குப்பைகளை நான்கு வகைகளாக தரம் பிரித்து வழங்குவது குறித்த விழிப்புணர்வு நடைபயணம்

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம் வார்டு எண்.38க்குட்பட்ட கல்வீரம்பாளையம் பள்ளி முதல் பொம்மனாம்பாளையம் கோயில் வரை, குப்பைகள...

கோவை கற்பகம் உயர்கல்வி நிறுவனத்தில் புதிய Pre-Incubation Centre மற்றும் Startup Studio தொடக்கம்

கோவை கற்பகம் உயர்கல்வி நிறுவனத்தின் 'கற்பகம் புத்தாக்கம் மற்றும் இன்குபேஷன் கவுன்சில்' (KIIC), தனது புதிய 'Pre-Incubatio...

2016 ஆனைமலை இளைஞர் கொலை வழக்கில் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை: கோவை மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பு

ஆனைமலை காவல் நிலையத்தில் குற்ற எண் 369/2016-ன் கீழ் பதிவான கொலை வழக்கில், மீனாட்சிபுரத்தைச் சேர்ந்த பாப்பான் @ சுதானந்தம...

ஜெம் வீரமணி வழக்கு: கோவை காவல் ஆணையர் உள்பட 2 ஐபிஎஸ் அதிகாரிகள் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்

ஜெம் வீரமணி வழக்கு தொடர்பாக கோவை மாநகர காவல் ஆணையர் Dr.N.கண்ணன் மற்றும் கூடுதல் ஆணையர் அருண் ஆகிய இரு மூத்த ஐபிஎஸ் அதிகா...

கோவை–போத்தனூர் இடையே பராமரிப்பு பணி: செப்.25, 26-ல் இரு மெமு ரயில் சேவையில் மாற்றம்

செப்டம்பர் 25 மற்றும் 26, 2026 ஆகிய தேதிகளில் கோவை-போத்தனூர் ரயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாள பராமரிப்பு பணிகள் நடைபெற...

கோவையில் பார் ஊழியரை கத்தியால் மிரட்டி பணம் பறித்த ரவுடி கைது

கோவை புலியகுளம் ரோடு பங்கஜாமில் ரோடு பகுதியில் உள்ள சன்ரிச் 11 - 11 பாரில் ஊழியர் பாண்டியராஜனிடம் இலவச மதுபானம் கேட்டு ம...