கோவை அருகே போதைப்பொருள் விற்க முயற்சி - திருப்பூர் இளைஞர் கைது

கோவை ஆலாந்துறை அருகே இரு சக்கர வாகனத்தில் கஞ்சாவை கடத்திச் சென்ற திருப்பூரை சேர்ந்த பிரசாந்த் எனும் இளைஞரை போலீசார் கைது செய்தனர். இளைஞர்களை குறிவைத்து அவர் கஞ்சா விற்பனையில் ஈடுபட முயன்றது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.


கோவை: கோவை மாவட்டம் முழுவதும் கஞ்சா மற்றும் குட்கா பொருட்கள் விற்பனை, கடத்தலை தடுக்க தனிப்படை அமைத்து போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், ஆலாந்துறை தனிப்படை போலீசார் காளியமங்கலம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அங்கே இரு சக்கர வாகனத்தில் வந்த இளைஞர் ஒருவரை நிறுத்தி அவரது வாகனத்தை போலீசார் சோதனையிட்டனர். அப்போது, உள்ளே சிறு சிறு பொட்டலங்களாக கஞ்சா இருந்தது தெரியவந்தது.



இதையடுத்து, அவரை காவல் நிலையம் அழைத்துச் சென்ற போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.அதில்,பிடிபட்ட நபர் திருப்பூர் மாவட்டத்தைசேர்ந்த நடராஜ் என்பவரின் மகன் பிரசாந்த் (வயது24) என்பதும், அவர் இளைஞர்களை குறிவைத்து ஆலாந்துறை சுற்றுவட்டார பகுதிகளில் கஞ்சா விற்பனையில் ஈடுபட முயன்றதும் தெரியவந்தது.

இதையடுத்து, பிரசாந்தை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்த 1.150 கிலோ கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர். கைதான பிரசாந்தை போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Newsletter

கோவையில் இருசக்கர வாகன திருட்டு, கத்தி முனையில் மிரட்டல்: மூவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கோவை மாவட்டம் கோமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருசக்கர வாகன திருட்டு மற்றும் கத்தி முனையில் மிரட்டல் வழக...

கோவையில் மத்திய அரசு மானிய யூரியா பதுக்கல்: 7 பேர் மீது வழக்கு; வாகன ஓட்டுநர்கள் 2 பேர் கைது - குடோன்களுக்கு சீல்..!

கோவை மாவட்டத்தில் மத்திய அரசின் மானிய விலை வேப்ப எண்ணெய் தடவிய யூரியாவை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த விவகாரத்தில் 7...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு மாணவர்களுக்கு போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கோவை...

கோவை-சக்தி சாலையில் வாகன சோதனை; விதிமீறிய ஏர் ஹாரன், LED விளக்குகள் அகற்றம் - அபராதம் விதிப்பு

கோவை-சக்தி சாலையில் விபத்து அபாயத்தை ஏற்படுத்தும் வகையில் விதிமுறைகளுக்கு புறம்பாக ஏர் ஹாரன்கள் மற்றும் உயர் ஒளித்திறன்...

கோயம்புத்தூரில் ரூ.12.28 கோடி மதிப்பீட்டில் உள்விளையாட்டு அரங்குகள் - ஆட்சித்தலைவர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள இறகுபந்து, கபடி, கைப்பந்து உள்விளையாட்டு அரங்குகள் மற...

கோவை சித்தாபுதூர் மாநகராட்சி பள்ளிக்கு சூரிய சக்தியில் இயங்கும் நாப்கின் எரிப்பு இயந்திரம் வழங்கல்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில், ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி மாணவிகள் உருவாக்கிய சூரிய...