கோவையில் 26 கைத்தறி நெசவாளர்களுக்கு வீடு - ஆணைகளை வழங்கினார் அமைச்சர் செந்தில்பாலாஜி!

கைத்தறி நெசவாளர்கள் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் 26 நெசவாளர்களுக்கு வீடு கட்டுவதற்காக தலா 4 லட்சம் வீதம் 1.04 கோடி மதிப்பிலான பணி ஆணைகளை, கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜி வழங்கினார்.


கோவை: கைத்தறி நெசவாளர்கள் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் நெசவாளர்களுக்கு வீடு கட்டுவதற்காக தலா 4 லட்சம் வீதம் 26 நெசவாளர்களுக்கு 1.04 கோடி மதிப்பிலான பணி ஆணைகளை, கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜி வழங்கினார்.



அப்போது, செய்தியாளர்களை சந்தித்த கைத்தறிவு உதவி இயக்குனர் சிவகுமார், சிறுமுகை பகுதியில் கைத்தறி பூங்கா அமைப்பதற்கு அமைச்சர் உறுதி கூறி உள்ளதாகவும், முதற்கட்ட பணிகள் இந்த வருடத்தில் துவங்க கூடும் எனவும் தெரிவித்தார்.

மேலும், நீலகிரி பகுதியில் தமிழ்நாட்டிலேயே முதல்முறையாக தோடர் இன மக்களுக்காக கூட்டுறவு சங்கம் அமைக்க மாநில கோரிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் அதனையும் கூடிய விரைவில் அமைச்சர் திறந்து வைப்பார் என்றும் அவர் அப்போது கூறினார்.



இந் நிகழ்ச்சியில் கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி, மாநகராட்சி மேயர் கல்பனா ஆனந்த் குமார், கைத்தறி உதவி இயக்குனர் சிவக்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Newsletter

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...

சின்னவேடம்பட்டி ஏரி மீட்பு முயற்சியில் பங்கேற்க குமரகுரு நிறுவனங்கள் அழைப்பு

குமரகுரு நிறுவனங்கள் கெளசிகா நீர்காரங்கள் அமைப்புடன் இணைந்து சின்னவேடம்பட்டி ஏரி மீட்புப் பணிக்கு தன்னார்வலர்களை அழைக்கி...