வீரபாண்டி பிரிவு நாகலிங்கேஸ்வரி அம்மன் கோயில் கும்பாபிஷேக விழா - ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம்!

கோவை பெரியநாயக்கன்பாளையம் அடுத்த வீரபாண்டி பிரிவு பகுதியில் உள்ள நாகலிங்கேஸ்வரி அம்மன் கோவிலில் கும்பாபிஷேக விழா கடந்த 21 ஆம் தேதி துவங்கிய நிலையில், முக்கிய நிகழ்வான கும்பாபிஷேகம் இன்று நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.



கோவை: பெரியநாயக்கன்பாளையம் அடுத்த வீரபாண்டி பிரிவு பகுதியில் உள்ள நாகலிங்கேஸ்வரி அம்மன் கோவில் கும்பாபிஷேக விழா கோலாகலமாக நடைபெற்றது.

கோவை பெரியநாயக்கன்பாளையம் அடுத்த வீரபாண்டி பிரிவு அருகேயுள்ள பயணியர் நகர் பகுதியில் அருள்மிகு நாகலிங்கேஸ்வரி அம்மன் திருக்கோயில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் கும்பாபிஷேக விழாவானது கடந்த 21ம் தேதி காலை மங்கள இசையுடன் தொடங்கியது.

இதில் விக்னேஸ்வர பூஜை, மஹாகணபதி ஹோமம், லட்சுமி, துர்கா, சரஸ்வதி ஹோமம், நவகிரக ஹோமம், கோமாதா பூஜைகள் நடைபெற்றன. அடுத்த நாள் ஜோதிபுரம் அருள்மிகு ஐயப்பசுவாமி ஆலயத்திலிருந்து, தீர்த்த குடங்கள் மற்றும் முளப்பாரி எடுத்துக்கொண்டு பெண்கள், குழந்தைகள் ஊர்வலமாக வந்தனர்.



தொடர்ந்து, அன்று மாலை யாக சாலைகள் அமைக்கப்பட்டு முதற்கால யாக வேள்வி பூஜைகள் நடைபெற்றது. மேலும் ஞாயிற்று கிழமை 2வது கால யாக வேள்வி பூஜைகளும் அன்று மாலை 3ஆம் கால யாக வேள்வி பூஜைகள் சிறப்பாக நடைபெற்றது.

இந்நிலையில், இன்று காலை 4ம் கால வேள்வி பூஜைகள் நடைபெற்றதை தொடர்ந்து விழாவின் முக்கிய நிகழ்ச்சியான கும்பாபிஷேக விழா தொடங்கியது.



இதில் கோவை ஸ்ரீ மத் தம்ராஜா அருள்பீடம் கிருஷ்ணமூர்த்தி சுவாமிகள், கோவை செல்வபுரம் சிவானந்தா தவக்குடில் ஸ்வயம் பிரகாஷ் ஆனந்தா சுவாமிகள், ஸ்ரீ ராஜ ராஜேஸ்வரி வேள்விக்குழு சர்வசாதகம் மணிகண்டன், கோவில் பூசாரி கருப்புசாமி ஆகியோர் முன்னிலையில் யாக சாலைகளில் இருந்து தீர்த்த குடங்கள் எடுத்து கோவிலை சுற்றி வந்து கோவில் விமானத்தில் தீர்த்த குடங்களில் உள்ள தீர்த்தங்கள் ஊற்றப்பட்டு கும்பாபிஷேக விழா நடைபெற்றது.



அப்போது பக்தர்கள் ஒம் சக்தி, பரா சக்தி என்று கோசங்களை எழுப்பினர்.



தொடர்ந்து அம்மன் சன்னதியில் அம்மனுக்கு தீர்த்தங்கள் ஊற்றப்பட்டு சிறப்பு அலங்கார பூஜைகள் நடைபெற்றன.



அதனை தொடர்ந்து அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.

Newsletter

கோவை கற்பகம் உயர்கல்வி நிறுவனத்தில் புதிய Pre-Incubation Centre மற்றும் Startup Studio தொடக்கம்

கோவை கற்பகம் உயர்கல்வி நிறுவனத்தின் 'கற்பகம் புத்தாக்கம் மற்றும் இன்குபேஷன் கவுன்சில்' (KIIC), தனது புதிய 'Pre-Incubatio...

2016 ஆனைமலை இளைஞர் கொலை வழக்கில் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை: கோவை மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பு

ஆனைமலை காவல் நிலையத்தில் குற்ற எண் 369/2016-ன் கீழ் பதிவான கொலை வழக்கில், மீனாட்சிபுரத்தைச் சேர்ந்த பாப்பான் @ சுதானந்தம...

ஜெம் வீரமணி வழக்கு: கோவை காவல் ஆணையர் உள்பட 2 ஐபிஎஸ் அதிகாரிகள் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்

ஜெம் வீரமணி வழக்கு தொடர்பாக கோவை மாநகர காவல் ஆணையர் Dr.N.கண்ணன் மற்றும் கூடுதல் ஆணையர் அருண் ஆகிய இரு மூத்த ஐபிஎஸ் அதிகா...

கோவை–போத்தனூர் இடையே பராமரிப்பு பணி: செப்.25, 26-ல் இரு மெமு ரயில் சேவையில் மாற்றம்

செப்டம்பர் 25 மற்றும் 26, 2026 ஆகிய தேதிகளில் கோவை-போத்தனூர் ரயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாள பராமரிப்பு பணிகள் நடைபெற...

கோவையில் பார் ஊழியரை கத்தியால் மிரட்டி பணம் பறித்த ரவுடி கைது

கோவை புலியகுளம் ரோடு பங்கஜாமில் ரோடு பகுதியில் உள்ள சன்ரிச் 11 - 11 பாரில் ஊழியர் பாண்டியராஜனிடம் இலவச மதுபானம் கேட்டு ம...

கோவை தடாகம் சாலையில் ஆம்புலன்ஸ் பணிமனையில் தீ விபத்து

கோவை தடாகம் சாலையில் உள்ள கோயில்மேடு அருகே ஆம்புலன்ஸ் பணிமனையில் திடீரென தீ பரவியது. இதனால் கரும்புகை மேகங்களாக சுற்றுவட...