வால்பாறை அருகே சிறுத்தைகள் நடமாட்டம் - கண்காணிப்பு கேமரா பொருத்தம்!

வால்பாறை அடுத்த சிறுகுன்றா எஸ்டேட் பகுதியில் தேயிலை தோட்ட பணியில் ஈடுபட்டிருந்த வடமாநில தொழிலாளர்களை சிறுத்தை தாக்கியதை தொடர்ந்து, சிறுத்தை நடமாட்டத்தை கண்காணிக்க 4 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.


கோவை: வால்பாறை அருகே சிறுத்தை நடமாடத்தை கண்காணிக்க கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

கோவை மாவட்டம் வால்பாறை அடுத்த சிறுகுன்றா எஸ்டேட் பகுதி உள்ளது. இந்த பகுதியில் உள்ள தேயிலை தோட்டத்தில் சில தினங்களுக்கு முன்பு தேயிலை தோட்ட பணியாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு பணியில் ஈடுபட்டிருந்த வடமாநில பெண்ணை சிறுத்தை தாக்கியது. இதை தொடர்ந்து அதே பகுதியில் பணியில் ஈடுபட்டிருந்த வடமாநில வாலிபரையும் சிறுத்தை தாக்கியது.

அடுத்தடுத்த நாட்களில் நடைபெற்ற சம்பவங்களால் தோட்டத் தொழிலாளர்கள் அச்சம் அடைந்தனர். தங்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என வடமாநில தொழிலாளர்கள் எஸ்டேட் நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்தனர். இந்த நிலையில் வால்பாறை வனச்சரக அலுவலர் வெங்கடேஷ் உத்தரவின் பேரில் 4 இடங்களில் சிறுத்தையை கண்காணிக்க கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து வனத்துறையினர் அந்த பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் கண்காணிப்பு கேமிராக்களையும் பார்வையிட்டு ஆய்வு செய்து வருகின்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...