தமிழகத்தில் இன்று கொங்கு மாவட்டங்களில் அதிகபட்ச வெப்பநிலை பதிவு - வானிலை மையம் தகவல்!

தமிழகத்தில் இன்றைய தினம் கொங்கு பகுதி மாவட்டங்களில் அதிகபட்ச வெப்பநிலை பதிவான நிலையில், ஈரோட்டில் சராசரியாக  37.5 டிகிரி செல்சியசும்,  கோவையில் சராசரியாக 36.3 டிகிரி செல்சியசும், நீலகிரியில் சராசரியாக 24.5 டிகிரி செல்சியஸ் வெப்பமும் பதிவானதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


கோவை: ஈரோடு மற்றும் கோவை உள்ளிட்ட கொங்கு பகுதி மாவட்டங்களில் அதிகபட்சமான வெப்பநிலை பதிவானதாகவானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கோடை காலம் துவங்குவதற்கு முன்பே தமிழகத்தில் வெயில் சுட்டெரிக்க துவங்கியது. இந்நிலையில், பல்வேறு மாவட்டங்களில் வெயில் வாட்டி வந்த நிலையில், கடந்த இரண்டு, மூன்று நாட்களாக அவ்வப்போது, மழை பெய்து குளிர்ச்சியான சூழல் நிலவி, பொதுமக்களுக்கு ஆறுதலை ஏற்படுத்தி உள்ளது.

இதனிடையே இன்றைய தினம் ஈரோடு, கோவை, திருப்பூர் உள்ளிட்ட கொங்கு பகுதி மாவட்டங்களில் அதிகபட்சமான வெப்பநிலை பதிவானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.



இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில்,ஈரோடு மாவட்டத்தில்,அதிகபட்சமாக 38.6 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவானதாகவும், குறைந்த பட்சமாக 23.2 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும், சராசரியாக 37.5 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும் பதிவானதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதேபோல், கோவை மாவட்டத்தில் அதிபட்சமாக 36.0 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவானதாகவும், குறைந்தபட்சமாக 25.4டிகிரி செல்சியஸ் வெப்பமும், சராசரியாக 36.3 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவானதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், நீலகிரி மாவட்டம் குன்னூரில் அதிகபட்சமாக 22.3 டிகிரி செல்சியஸ் வெப்பமும், குறைந்தபட்சமாக 15.2 டிகிரி செல்சியஸ் வெப்பமும், சராசரியாக 24.5 டிகிரி செல்சியஸ் வெப்பமும் பதிவானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல், கோவை மாவட்டம் வால்பாறையில் அதிகபட்சமாக 27.0 டிகிரி செல்சியஸ் வெப்பமும், குறைந்தபட்சமாக 16.0 டிகிரி செல்சியஸ் வெப்பமும், சராசரியாக 28.1 டிகிரி செல்சியஸ் வெப்பமும் பதிவானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...