கோவையில் வீட்டு வசதி வாரிய திட்டப்பணிகள் குறித்து ஆட்சியர் கிராந்திகுமார் பாடி திடீர் ஆய்வு!

கோவை மாவட்டத்தில் தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு திட்டப்பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, பணிகளை விரைந்து முடித்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என உத்தரவிட்டார்.


கோவை: கோவை மாவட்டத்தில் வீட்டு வசதி வாரியம் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் பணிகள் குறித்து ஆட்சியர் கிராந்திகுமார் பாடி ஆய்வு மேற்கொண்டார்.



கோவையில் தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டப்பணிகள் ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி, காடம்பாளையம் பகுதியில் செயல்பட்டு வரும் அரசுப் பள்ளி மாணவ மாணவியர்களுக்கான நீட் தேர்வு பயிற்சி மையம் ஆகியவை குறித்து நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.



வெள்ளக்கிணறு கிராமத்தில் 50 ஏக்கர் பரப்பளவில் 1,006 மனைகள் மேம்பாட்டு திட்டம் 50 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்பட்டு வருவதையும், பெரியநாயக்கன் பாளையத்தில் சுமார் 10.81 ஏக்கர் பரப்பளவில் பொருளாதாரத்தில் நலிவடைந்தோர் பிரிவுக்காக 152.87 கோடி மதிப்பில் 1800 வீடுகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டு வருவதையும் மாவட்ட ஆட்சியர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

வீட்டுவசதி வாரியத்தின் கோயம்புத்தூர் பிரிவு அலுவலகத்தை பார்வையிட்ட மாவட்ட ஆட்சியர் விரைந்து பணிகளை முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வர அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். தொடர்ந்து வெள்ளக்கிணறு கிராமத்தில் வீட்டுவசதி துறையின் மூலம் மனை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ள வீட்டு மனைகளை மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டார்.

பின்னர் அப்பிரிவில் மேற்கொள்ளப்பட்டுள்ள வசதிகள் குறித்தும், பயனாளிகள் தேர்வு குறித்தும், பொருளாதாரத்தில் நலிவுற்ற பிரிவினர், குறைந்த வருவாய் பிரிவினர், நடுத்தர வருவாய் பிரிவினர், உயர் வருவாய் பிரிவினர் ஆகிய நான்கு பிரிவுகளின் ஒதுக்கீடு செய்யப்படும் வீட்டுமனை பிரிவுகளின் எண்ணிக்கை குறித்தும் கேட்டறிந்தார்.



அதனை தொடர்ந்து பெரியநாயக்கன்பாளையத்தில் பொருளாதாரத்தில் நலிவடைந்தோர் பிரிவுக்காக ரூ.152.17 கோடி மதிப்பில் 500 வீடுகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்புகள் இறுதி கட்டப் பணிகள் நடைபெற்று வருவதை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சித்தலைவர் எஞ்சியுள்ள பணிகளை விரைந்து முடிக்க அறிவுறுத்தினார்.



பின்னர், கவுண்டம்பாளையம் பகுதியில் செயல்பட்டு வரும் அரசுப் பள்ளி மாணவ மாணவியர்களுக்கான நீட் தேர்வு பயிற்சி மையத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் பார்வையிட்டு மையத்தில் மாணவர்களுக்கு வழங்கப்படும் மதிய உணவின் தரத்தினை பரிசோதனை செய்தார்.

Newsletter

கோவையில் டெங்கு தடுப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு சரிபார்ப்பு பட்டியல் வழங்கப்படும்

கோவை மாநகராட்சி 100 வார்டுகளில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. 28.08.2026 முதல் பள்ளிகள், கல்லூரிகள்...

கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்தில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டல பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வார்டு...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் பீளமேடு பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு, சாலை அமைப்பு,...

திருப்பூரில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 27ஆம் தேதி 59.22 அடியாக உயர்ந்துள்ளது. நீர் பிடிப்பு பகுதிகளில...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

ஆனைமலை, பொள்ளாச்சி, வால்பாறை பகுதிகளில் உள்ள அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஆழியாறு அணையி...

கோவையில் போட்டித் தேர்வு பயிற்சி வகுப்புகளுக்கு ஆசிரியர்கள் தேவை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் TNPSC, SSC, RRB, IBPS போன்ற போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட...