கோவையில் மூதாட்டிகளை குறிவைத்து செயின் பறிப்பு - இளம் பெண் கைது!

கோவை கோட்டூரில் உள்ள ஆஞ்சநேயர் கோவில் கும்பாபிஷேகத்தின் போது மூதாட்டிகளை குறிவைத்து செயின் பறிப்பில் ஈடுபட்ட கவுதமி என்ற இளம் பெண்ணை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்து 13 சவரன் நகைகளை பறிமுதல் செய்துள்ளனர்.


கோவை: கோவை கோட்டூரில் மூதாட்டிகளை குறிவைத்து செயின் பறிப்பில் ஈடுபட்ட இளம் பெண்ணை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

கோவை மாவட்டம் கோட்டூரில் ஆஞ்சநேயர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் கடந்த பிப்ரவரி மாதம் 1ஆம் தேதி கும்பாபிஷேக விழா நடைபெற்றது. இந்த விழாவில் அந்த பகுதியை சேர்ந்த ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர்.

விழாவின் போது கூட்ட நெரிசலை பயன்படுத்தி மலையாண்டி பட்டினத்தை சேர்ந்த பழனாத்தாள் (75), சிவபாக்கியம் (65), துளசியம்மாள் (75) ஆகிய மூதாட்டிகளிடம் இருந்து மொத்தம் 13 சவரன் செயினை மர்ம நபர் பறித்துக்கொண்டு தப்பிச் சென்றனர்.

செயினை பறிகொடுத்த மூதாட்டிகள் இது குறித்து கோட்டூர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கோவிலில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு காமிராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர்.

அதில் இளம் பெண் ஒருவர் வயதான மூதாட்டிகளை குறி வைத்து செயினை பறிக்கும் காட்சிகள் பதிவாகி இருந்தது. இதனை வைத்து அந்த பெண்ணை போலீசார் தேடி வந்தனர். இந்நிலையில், நேற்று அவரை கோட்டூர் போலீசார் கைது செய்தனர்.

அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவர் தூத்துக்குடி நரிக்குறவர் காலனியை சேர்ந்த கவுதமி (34) என்பது தெரிய வந்தது. அவரிடம் இருந்த 13 சவரன் நகைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர் கைது செய்யப்பட்ட கவுதமியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...