பூலாங்கிணர் பகுதியில் நாளை மின்தடை-மின்வாரிய செயற்பொறியாளர் அறிவிப்பு!

உடுமலை அருகேயுள்ள பூலாங்கிணர் துணை மின்நிலையத்திற்கு உட்பட்ட மின் பாதைகளில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை வடபூதிநத்தம், எஸ். பி.நத்தம், வாளவாடி, தளி, திருமூர்த்தி நகர் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது என மின்வாரிய செயற்பொறியாளர் மூர்த்தி தெரிவித்துள்ளார்.


திருப்பூர்: பூலாங்கிணர் துணை மின்நிலையத்தில் பாரமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதால், நாளைய தினம் மின் விநியோகம் தடை செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து உடுமலை மின்வாரிய இயக்குதலும், பேணுதலும் செயற்பொறியாளர் த.மூர்த்தி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,பூலாங்கிணர் துணை மின் நிலையத்துக்கு உட்பட்ட பூலாங்கிணர், தளி பீடர்களில் அமைந்துள்ள மின் பாதைகளில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.

இதன் காரணமாக நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை வடபூதிநத்தம், எஸ். பி.நத்தம், வாளவாடி, தளி, திருமூர்த்தி நகர், ஜல்லிபட்டி, ஓனாகல்லூர், சந்தன கருப்பனூர், லிங்கமவூர், குறிச்சிக்கோட்டை ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் தடை செய்யப்படுகிறது.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...