கோவை கோர்ட் வளாகத்தில் மனைவி மீது ஆசிட் வீசிய கணவன் - மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி பலி

குடும்ப பிரச்சினை காரணமாக கோவை நீதிமன்ற வளாகத்தில் கணவன் ஆசிட் ஊற்றியதால் படுகாயமடைந்த கவிதா எனும் பெண், கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று உயிரிழந்தார். கொலை வழக்காக பதிவு செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.


கோவை: கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் கடந்த மார்ச் மாதம் 23ம் தேதி குடும்ப பிரச்சனை காரணமாக மனைவி கவிதா மீது கணவர் சிவா ஆசிட் ஊற்றினார்.

கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடால் பிரிந்து வாழ்ந்து வந்த கவிதா, தன்மீது உள்ள திருட்டு வழக்கு குறித்த விசாரணைக்காக, முதலாவது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்திற்கு வந்திருந்தார். அப்போது நீதிமன்ற வளாகத்தில் வைத்து அவரது கணவர் சிவா, கவிதாமீது ஆசிட் ஊற்றினார்.

இதையடுத்து, சிவாவை கொலை முயற்சி வழக்கில் கைது செய்த போலீசார் அவரை மத்திய சிறையில் அடைத்தனர். 80 சதவீதம் உடல் வெந்த நிலையில் கோவை அரசு மருத்துவமனையில் கவிதாவிற்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த கவிதா, நேற்று இரவு பலனின்றி உயிர் இழந்தார்.

இதையடுத்து, இந்த வழக்கை கொலை வழக்காக பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே பிரேத பரிசோதனைக்கு பின்னர் கவிதாவின் உடல் உறவினர்களிடம் இன்று ஒப்படைக்கப்படவுள்ளது. நீதிமன்ற வளாகத்திற்குள் ஆசிட் வீச்சில் காயம் அடைந்த பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...