13 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு - உடுமலை இளைஞருக்கு 20 ஆண்டு சிறை!

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே 13 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த உடுமலையை சேர்ந்த கோகுலகிருஷ்ணன் என்பவருக்கு 20 ஆண்டு சிறைதண்டனை விதித்து திருப்பூர் மகிளா நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்கவும் உத்தரவிட்டுள்ளது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகேயுள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் கோகுலகிருஷ்ணன் (வயது21). கடந்த 2022ம் ஆண்டு இவர், 13 வயது சிறுமியை திருமணம் செய்வதாக கூறி பாலியல் வன்கொடுமை செய்தார்.

இதுகுறித்து, சிறுமியின் தாயார் அளித்த புகாரின் பேரில், உடுமலை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கோகுலகிருஷ்ணனை கைது செய்தனர். இது தொடர்பான வழக்கு விசாரணை, திருப்பூர் மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்றுவந்தது.

இந்த நிலையில், இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதில், கோகுலகிருஷ்ணனுக்கு 20 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனை, 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து நீதிபதி பாலு உத்தரவிட்டார்.

மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 5 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கவும் உத்தரவிடப்பட்டது. தீர்ப்புக்கு பின், கோகுலகிருஷ்ணன் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...