தானியங்கி இயந்திரம் மூலம் மதுவிற்பதை தமிழக அரசு கைவிட வேண்டும் - எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்!

இளைஞர்களின் எதிர்காலத்தையோ, தமிழ்நாட்டின் கலாச்சாரம், பண்பாட்டையோ கருதாமல், வருவாயை மட்டுமே கருதி தானியங்கி இயந்திரம் மூலம் மது விற்பனையை தமிழக அரசு தொடங்கியுள்ளதாகவும், உடனடியாக அரசு இதனை கைவிட வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.


சென்னை: தானியங்கி இயந்திரம் மூலம் மது விற்பதை, தமிழ்நாடு அரசு உடனடியாக கைவிட வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, டாஸ்மாக் கடைகளில் 21 வயதுக்கு குறைந்தவர்களுக்கு மது விற்கக்கூடாது என்ற குரல் ஓங்கி ஒலிக்கும் நிலையில், தமிழக அரசு தானியங்கி இயந்திரம் மூலம் மது விற்பனையை தொடங்கி உள்ளது.

மாநிலம் முழுவதும் மால்கள் உள்பட 500க்கும் மேற்பட்ட இடங்களில் அந்த இயந்திரங்கள் பொருத்தப்பட உள்ளதாக வெளியான தகவல் மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இளைஞர்களின் எதிர்காலத்தையோ, தமிழ்நாட்டின் கலாச்சாரம், பண்பாட்டையோ கருதாமல், வருவாயை மட்டுமே கருதி இதுபோன்ற செயல்களில் திமுக அரசு ஈடுபடுகிறது.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...