மகுடங்களை மறுதலித்த ஒப்பற்ற தலைவர் வைகோ - கோவை மாநகர் மாவட்ட செயலாளர் அறிக்கை

மதிமுகவுக்கு எதிராக அக்கட்சியின் அவைத்தலைவர் திருப்பூர் துரைசாமி போர்க்கொடி தூக்கியுள்ளார். இதற்கு பதிலடியாக கோவை மாநகர மாவட்டச் செயலாளர் கணபதி செல்வராசு, துரைவைகோவுக்கு ஆதரவாக வெளியிட்டுள்ள அறிக்கை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


கோவை: மதிமுகவை திமுகவுடன் இணைத்துவிடலாம் என மதிமுக அவைத் தலைவர் துரைசாமி , வைகோவுக்கு கடிதம் எழுதியிருந்தார்.

இந்த விவகாரம் மதிமுகவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக கோவை மாநகர் மாவட்டச் செயலாளர் கணபதி செல்வராசு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், மகுடங்களை மறுதலித்த ஒப்பற்ற தலைவர் வைகோ. அவரால் அவருக்காக தொண்டர்களால் உருவாக்கப்பட்ட இயக்கம் மறுமலர்ச்சி திமுக. அந்த இயக்கத்தை வேறு ஒரு இயக்கத்துடன் இணைக்கச் சொல்ல பெரியவர் துரைசாமிக்கு எந்த உரிமையும் இல்லை.

திமுக கூட்டணியில் இருக்கும் போதே அதிமுக வை ஆதரித்து பேசியவர் இது போன்ற இழிவான அருவருப்பான அரசியலை இனியாவது கைவிட வேண்டும்.

இயக்கத்தை பிளவு படுத்த நினைத்த தீய சக்திகள் தமிழகம் முழுவதும் ஆளுகிற ஆண்ட இயக்கங்களுக்கு இணையாக வீறு கொண்டு நடைபெறுகிற மறுமலர்ச்சி திமுக ஐந்தாவது அமைப்பு தேர்தலால் நிலைகுலைந்து போயிருக்கிறது.

அதன் வெளிப்பாடே பெரியவர் துரைசாமியின் பேட்டி. தலைவர் வைகோ அவர்களின் வழிகாட்டுதலில் எங்கள் கோவை மாநகர் மாவட்ட மதிமுக பயணம் தொடரும். நம்மவர் துரை வைகோ அவர்களின் கருத்தை ஏற்று இதை கடந்து செல்வோம்.

இவ்வாறு, அவர் குறிப்பிட்டுள்ளார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...