தாராபுரம் வழியே தென்மாவட்டங்களுக்கு கூடுதல் பேருந்து சேவை - மக்கள் கோரிக்கை

அதிகாலை முதல் குண்டடம், தாராபுரம், ஒட்டன்சத்திரம் பகுதிகளிலிருந்து மதுரை உட்பட தென் மாவட்டங்களுக்கு கூடுதல் பேருந்துகளை இயக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


திருப்பூர்: தென் மாவட்டங்களில் இருந்து தாராபுரம் வழியாக கோவை, ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களுக்கு அரசுப் பேருந்துகள் தற்போது இயக்கப்பட்டுவருகிறது. இயக்கப்படுகிறது. அதேபோல் கோவை, திருப்பூர் மாவட்டங்களில் இருந்து தென் மாவட்டங்களுக்கு தாராபுரம் வழியாக பேருந்துகள் செல்கின்றன.

இருப்பினும், நாள்தோறும் அதிகாலை 4 மணி முதல் காலை 6 மணி வரை பேருந்து சேவை இல்லை. இதனால், அதிகாலை முதல் குண்டடம், தாராபுரம், ஒட்டன்சத்திரம் பகுதிகளிலிருந்து மதுரை செல்ல பொதுமக்கள் மணிக்கணக்கில் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது.

எனவே, பொதுமக்களின் சிரமத்தைக் கருத்தில் கொண்டு, தாராபுரம் வழியாக தென்மாவட்டங்களுக்கு கூடுதல் பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசுக்கு பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...